அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிறு,கட்சிகள், திகைப்பு,    திமுக, அதிமுக

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், பேரம் படியாததால், சிறு கட்சிகள் தனித்து விடப் பட்டுள்ளன. அந்த கட்சிகள், எங்கு செல்வது என தெரியாமல், திகைத்து வருகின்றன. அதே நேரத்தில், இரு கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளும், அவை போட்டியிட விரும்பும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில், பிடிவாதமாக உள்ளன.
தமிழகத்தில், எந்த தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க., தலைமையில், ஒரு கூட்டணி, தி.மு.க., தலைமையில், மற்றொரு அணி அமைவது வழக்கம். இவ்விரண்டு கூட்டணியில் ஐக்கியமாவது தான், சிறிய கட்சிகளின் வழக்கம். 'லெட்டர் பேடு' கட்சிகள், எங்கு கவனிப்பு அதிகமாக உள்ளதோ, அந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும்.

தனித்து போட்டி


ஆனால், 2014 லோக்சபா தேர்தல் மற்றும் 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. அ.தி.மு.க.,வின் கூட்டணி கதவு மூடப்பட்டதால், சிறிய கட்சிகள், தி.மு.க., பக்கம் தாவின. அங்கும் இடம் கிடைக்காததால், சில கட்சிகள் தனித்து போட்டியிட்டன. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவு

காரணமாக, இம்முறை, இரு கூட்டணியிலும் எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என, சிறிய கட்சிகள் எதிர்பார்த்தன. அது, தற்போது பொய்யாகி உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க.,வுக்கு, தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப் பட்டு, அறிவிக்கப்பட்டு விட்டது. தே.மு.தி.க., அதிகமாக கேட்பதால், இழுபறி நீடிக்கிறது. தே.மு.தி.க., கேட்கும் அளவிற்கு, 'சீட்' தர முடியாது என்பதில், அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. இதனால், குழப்பத்தில் உள்ள, தே.மு.தி.க.,வுக்கு, காங்கிரஸ் வழியாக துாது அனுப்பியுள்ளது, தி.மு.க., தலைமை.
அதேபோல, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, த.மா.கா., போன்றவை, அ.தி.மு.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தின. அக்கட்சிகளுக்கு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், தலா,

ஒருசீட் வழங்குவதாக, அ.தி.மு.க., கூறியுள்ளது. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், ஒரு சீட் ஒதுக்கும்படியும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட, தயாராக இருப்பதாகவும், அ.தி.மு.க.,விடம் விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால், அக்கட்சியை, அ.தி.மு.க., கண்டுகொள்ள வில்லை.தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட், கம்யூ., மற்றும் இந்திய, கம்யூ., கட்சிகளுடன், நேற்று பேச்சு நடத்தப்பட்டது. அக்கட்சிகள், தலா, இரண்டு சீட் கேட்க, தி.மு.க., ஒன்று மட்டும் தருவதாக கூறியுள்ளது. அதை, அக்கட்சிகள் ஏற்காததால், உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் வந்துள்ளது.
ம.தி.மு.க., முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை

சிறுத்தைகள் கட்சி போன்றவற்றுக்கும், தலா, ஒன்று கொடுக்கவே, தி.மு.க., விரும்புகிறது. இந்த தகவலை கேட்டு, இந்த கட்சிகள் எல்லாமே அதிர்ச்சியில் உள்ளன.மக்கள் நீதி மையம் கட்சிக்கு, இரண்டு இடங்களை ஒதுக்கும்படி, தி.மு.க.,விடம், காங்., வலியுறுத்தியது. ஆனால், தி.மு.க., ஏற்க மறுத்ததால், தனித்து போட்டியிடப் போவதாக, கமல் அறிவித்துள்ளார்.

புதிய அணி


தினகரனின், அ.ம.மு.க., கட்சி, தன் தலைமையில், பெரிய கூட்டணியை உருவாக்க, பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன், ரகசிய பேச்சு நடத்தியது. எதுவும் எடுபடாததால், தற்போதைய நிலையில், அக்கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி உட்பட, மேலும் சில கட்சிகள், தனித்து விடப்பட்டு உள்ளன.
பெரிய கட்சிகள், தொகுதி பங்கீட்டில் பிடிவாதமாக இருப்பதாலும், பேரம் படியாததாலும், சிறிய கட்சிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றன. இரு கூட்டணியிலும், இடம் கிடைக்காத கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய அணியை உருவாக்குமா என்பது, இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
23-பிப்-201902:08:15 IST Report Abuse

Nivasமக்கள் நலக் கூட்டணியில் இவர்களது பலம் தெரியவில்லையா? இவர்களுக்கு என்று ஒரு ஓட்டும் இல்லை இவர்களை சேர்க்காமல் இருப்பதே நல்லது.. ஒரு mp என்ன சும்மாவா?

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
22-பிப்-201922:00:17 IST Report Abuse

தமிழ்மைந்தன் பெரிய கட்சியாக இருந்து சிரிய கட்சியாக மாறியுள்ள ஊழல்திமுகவிற்கு இந்த அறிவுரை பொருந்துமா

Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
22-பிப்-201920:48:36 IST Report Abuse

Raghuraman Narayananஅமுமுக இந்த சின்ன கட்சிகளை எல்லாம் சேர்த்து கொண்டு ஒரு கூட்டணி அமைக்கலாம். மக்கள் மய்யம் உட்பட.

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X