சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கார் பார்க்கிங்' அமைக்க எதிர்ப்பு 5 மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'கார் பார்க்கிங்' அமைக்க எதிர்ப்பு 5 மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம், தேக்கடி ஆனவாச்சல் பகுதியில் 'கார் பார்க்கிங்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனவாச்சல் பகுதியில் கேரள வனத்துறை 'கார்பார்க்கிங்' அமைத்து வருகிறது. பசுமைத் தீர்ப்பாய உத்தரவை மீறும் வகையில் தளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் பெரியாறு அணையில் 152 அடிநீர் தேக்குவதில் சிக்கல் ஏற்படும். இதை தமிழக அரசு தடுக்கவில்லை.கேரள வனத்துறையை கண்டித்து தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் உத்தமபாளையததில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.கேரள - தமிழக தமிழர் கூட்டமைப்பு தலைவர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார்.ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக உண்ணாவிரதம் இருக்க விவசாயிகள் சங்கம் சார்பில்அனுமதி கோரப்பட்டது அதற்கு போலீசார் மறுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-பிப்-201902:14:18 IST Report Abuse
Mani . V யார் எப்படி போராடினாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் கை நீட்டி வாங்கிய காசுக்கு வஞ்சகம் செய்ய முடியாது. எனவே கார் பார்க்கிங் கட்டாயம் அமைத்தே தீருவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X