சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அசுர வேகத்தில் கார் ஓட்டிய மாணவி இருசக்கர வாகனத்தில் மோதி பறந்தார்

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கோவை, அசுர வேகத்தில் காரை ஓட்டிய கல்லுாரி மாணவி, இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதி, நிற்காமல் சென்ற, 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.கோவையில், நேற்று முன்தினம் மாலை, கொடிசியா வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த கல்லுாரி மாணவர் பாலாஜி, 20 அவிநாசி ரோடு செல்ல திரும்பினார். அப்போது, அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த கார், இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட பாலாஜி, படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார், வேகம் குறையாமல், பறந்தது.அப்பகுதி மக்கள், பாலாஜியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர், 'ஹெல்மெட்' அணிந்திருந்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.கோவை, போக்குவரத்து புலனாய்வு போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, விபத்தை ஏற்படுத்திய காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.காரை ஓட்டியது, குனியமுத்துாரைச் சேர்ந்த, அர்ச்சனா ரூத், 19, என்பதும், தனியார் கல்லுாரியில் படித்து வருவதும் தெரிந்தது. மாணவி மீது, மூன்று பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடக்கிறது.சரவணம்பட்டியில் உள்ள, 'மால்' ஒன்றுக்கு, மாணவியர் இரண்டு கார்களில் சென்றதாகவும், அப்போது, மாணவியரின் கார்களுக்கு இடையே நடந்த, 'ரேஸ்' காரணமாக, இந்த விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து வீடியோ, வேகமாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
22-பிப்-201916:07:07 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டும் தலைக்கனமும் வீதிகளை பாதுகாக்காமல் ஆக்கிரமிப்பு செய்தலும் என்று சார்ந்த அதிகாரிகள் குறிப்பாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறை ஒழுங்காக தனது பணியை செய்கிறதோ அன்று தான் தமிழகம் தழைக்கும் அதிலும் குறிப்பாக காஞ்சிபுரத்தில் அத்துமீறிய ஆக்கிரமிப்புகள் வீதிகள் பாதுகாப்பு இன்மை பற்றி மாவடட ஆட்சி தலைவர் எதுவுமே கண்டுகொள்ளுவதில்லை முதலில் காஞ்சிபுரம் மார்க்கெட்டில் அதிகாரிகள் நேரடியாக வந்து துட்டு கொடுத்து காய் கறி வாங்கிடும் பழக்கம் மேற்கொண்டால் தான் மக்கள் காய்கறி கடைக்குள்ளே சென்று மீண்டு வருவது என்பது புரியும்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-பிப்-201902:24:42 IST Report Abuse
Mani . V அட விடுங்கப்பா. பணக்கார வீட்டு பிள்ளைகள் (ஆண், பெண் இருவருமே) என்றால் கொஞ்சம் அப்படி, இப்படி (தண்ணி அடிக்கிறது, அசுர வேகத்தில் கார் ஓட்டுவது, சாலையில் செல்வோரை கார் ஏற்றி கொலை செய்வது,) இருக்கத்தான் செய்யும். சரி, சரி வாங்க வேண்டியதை சட்டு, புட்டுன்னு வாங்கிக் கொண்டு கேஸை ஒன்றும் இல்லை என்று தள்ளுபடி செய்யுங்க. அப்பத்தானே அது மீண்டும் மற்றவர்கள் மீது காரேற்றி கொலை செய்ய முயற்சி செய்ய முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X