சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேண்டாம் ரூ.2,000 3 விவசாயிகள் மனு

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (10)
Advertisement
வேண்டாம் ரூ.2,000 3 விவசாயிகள் மனு

தஞ்சாவூர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில், தங்களது பெயரை நீக்க வேண்டும், என மூன்று விவசாயிகள், மனு அளித்துள்ளனர்.
'வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, சிறப்பு நிதியாக, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து, 2004ம் ஆண்டு கணக்கின்படி, மாவட்ட நிர்வாகம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை, தயார் செய்து வருகிறது.
இந்த பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், ஆயிரக்கணக்கானோர், தினமும் நீண்ட வரிசையில் நின்று, விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில், தங்கள் பெயரை நீக்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, குறு விவசாயிகள் மலர்கொடி, தனலட்சுமி, ரேணுகாதேவி ஆகியோர், பூதலுார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேற்று மனு அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், 'தமிழக அரசுவழங்கும், 2,000 ரூபாய் எங்களுக்கு வேண்டாம். அந்த நிதியை, தகுதியானவர்களுக்கு வழங்கவேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-பிப்-201914:14:29 IST Report Abuse
Matt P தங்களுக்கு முடிந்த அளவுக்கு வசதிகள் இருந்தும் தங்களால் கோடி கணக்கான அளவுக்கு தங்களால் கொள்ளையடிக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய பிரபல தமிழ் பெண்களுக்கு நடுவில், நல்லெண்ணமுள்ள பெண்மணிகள் ...கனிமொழி ,(தந்தை வழியில் ) சசிகலாவும் தஞ்சை பக்கம் தான் .
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-பிப்-201913:03:18 IST Report Abuse
pattikkaattaan மானமுள்ள , சொரணையுள்ள இந்த தமிழச்சிகள் வாழ்க ..
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
22-பிப்-201912:55:57 IST Report Abuse
Muthukumaran உண்மையான தமிழச்சிகள். தமிழக அரசுக்கு இதை விட கேவலம் இருக்க முடியுமா????? இலவசம் கொடுத்த திருட்டு திராவிட கட்சிகளை அடித்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X