அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு?

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (72)
Advertisement

சென்னை : தே.மு.தி.க.,வுக்கு, ஐந்து தொகுதிகள் வழங்க, அ.தி.மு.க., முன்வந்துள்ளது.







அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைய சம்மதம் தெரிவித்திருந்தது. பா.ஜ., - தே.மு.தி.க., கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்வதற்கு முன்னரே, பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா பதவியை, அ.தி.மு.க., ஒதுக்கியது. அதன்பின், தே.மு.தி.க.,வுக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. இதை, தே.மு.தி.க., ஏற்கவில்லை.

'பா.ம.க.,வுக்கு வட மாவட்டங்களில் மட்டுமே, செல்வாக்கு உள்ளது. எங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும், தனி ஓட்டு வங்கி உள்ளது. எனவே, பா.ம.க.,வை விட, கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என,வலியுறுத்தியது.





இதனால், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைவதில் இழுபறி ஏற்பட்டது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், நேற்று மாலை, தே.மு.தி.க., தலைமையுடன் பேச்சு நடத்தினர். அப்போது, தே.மு.தி.க.,விற்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர்.





தே.மு.தி.க., தரப்பில், 'ஐந்து என்றால், நாங்கள் கேட்கும் தொகுதிகளையே தர வேண்டும்' என்று, நிபந்தனை விதித்துள்ளனர். அதற்கு அமைச்சர்கள், கட்சி தலைமையிடம் பேசிய பின், பதில் அளிப்பதாக கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
27-பிப்-201917:24:00 IST Report Abuse
Ramshanmugam Iyappan விஜயகாந்த் கட்சி ஒரு கட்சியா? அவர்களை கூட்டணியில் சேர்த்தது மிகப்பெரிய இழுக்கு என அம்மா அவர்கள் சட்டசபையில் சொன்னது நினைவில்லயா? அந்த கட்சியை யாரும் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும், அவர்களாகவே வழிக்கு வந்துவிடுவர், எப்பொழுதும் முடிவை எடுக்க தாமதம்...பெரிய ஓட்டுவங்கி இருப்பதாக நினைப்பு..எதற்கும் தகுதி இல்லாத நபர்.
Rate this:
Share this comment
Cancel
deva - chennai,இந்தியா
26-பிப்-201917:04:48 IST Report Abuse
deva தேமுதிக வால் பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த இயலாது ,ஒரு சதவிகிதத்திற்கும் கீழேயே அதன் செல்வாக்கு உள்ளது,கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தின் பரப்புரை நிறைய நகைச்சுவை ,கேலி,கிண்டல் கலந்த துணுக்குகளாகத்தான் இருந்தது,இவரை தைரியமாக புறக்கண்ணிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
25-பிப்-201917:16:59 IST Report Abuse
Gnanasekaran Vedachalam கோல்டன் ஓப்போர்ட்டுனிட்டி . போனால் கிடைக்காது வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ளவும் டோன்ட் மிஸ் தி பஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X