ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (53)
Advertisement

இஸ்லாமாபாத்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.







கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 18 போலீசார் உட்பட 166 பேர் பலியானார்கள். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பு.





காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாக்., மீது நடவடிக்கை எடுக்கும்படி, உலக நாடுகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனையடுத்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.




இந்நிலையில் பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையில், தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவின் ஜமாத்- உத்-தவா அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த அமைப்பின் அறக்கட்டளையான பலாஹ்-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாக்., அரசு தடை விதித்தது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
22-பிப்-201919:31:29 IST Report Abuse
Nivas அவன் பெயரை மாத்தி வச்சிக்குவான்... அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்.. அவன் செய்த தவறுக்கு அவனுக்கு துக்கு தண்டனை கொடுக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-201915:52:10 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஒரு டுபாக்கூர் அறிவிப்பு????
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
22-பிப்-201915:31:24 IST Report Abuse
Viswam எல்லோர் கவனத்தையும் திசை திருப்பும் வேலை. உலக நாடுகளும் இதை பார்த்துவிட்டு ஒரு டிக் மார்க் போடும். கொஞ்ச நாளைக்கு பிறகு வேற பேருல வந்து மறுபடியும் இந்த காட்டுமிராண்டி தீவிரவாத கும்பல் வேலைய ஆரம்பிச்சுடுவானுங்க. பணமும், ஆயுதமும், ராணுவ ஆதரவும், எந்தப்பேருல வந்தாலும் இவனுங்களுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும் வரை நமக்கு தொல்லை தீராது. நம்ம ஊர் செகுலர் கூமுட்டைகள் எல்லாம் இம்ரான் நல்லவரு, எல்லா ஆதாரத்தையும் அவர்கிட்ட கொடுக்கிறதுதான் முறைன்னு, அப்பத்தான் தீவிரவாதத்தை ஒடுக்க அவருக்கு முயற்சி எடுக்கமுடியும்ன்னு ஒப்பாரி வைப்பாங்க எல்லாம் 25 வருஷமா நாங்க மும்பைலேந்து பாத்துக்கிட்டேதான் இருக்கோம். இதெல்லாம் சரிபட்டுவராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X