பொது செய்தி

தமிழ்நாடு

கட்டி முடித்த மீன் விற்பனை கூடம்: 6 மாதங்களாக பூட்டியிருக்கும் அவலம்

Added : பிப் 22, 2019
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூரில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மீன் விற்பனை கூடம், அரசு மானியத்தின் ஒரு பகுதி நிதியை ஒதுக்கீடு செய்யாததால், பயன்பாடின்றி புதர்மண்டி காணப்படுகிறது.மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில், 2017-18ல், மீன் விற்பனை அங்காடி கட்ட மத்திய, மாநில அரசின் நிதி, 90 சதவீதம், சங்க நிதி, 10 சதவீதம் என மொத்தம், 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

மேட்டூர்: மேட்டூரில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மீன் விற்பனை கூடம், அரசு மானியத்தின் ஒரு பகுதி நிதியை ஒதுக்கீடு செய்யாததால், பயன்பாடின்றி புதர்மண்டி காணப்படுகிறது.
மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில், 2017-18ல், மீன் விற்பனை அங்காடி கட்ட மத்திய, மாநில அரசின் நிதி, 90 சதவீதம், சங்க நிதி, 10 சதவீதம் என மொத்தம், 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி மேட்டூர் மீன்வளத்துறை வளாகத்தில், 10 கடைகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடி ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. மத்திய, மாநில அரசு தங்கள் நிதியில், 26 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், மீதமுள்ள தொகை இன்னமும் வழங்கவில்லை. அந்த நிதி கிடைக்காததால், அங்காடியை கட்டி முடித்த ஒப்பந்ததாரர் கூட்டுறவு சங்கத்தில் இன்னமும் ஒப்படைக்கவில்லை. கட்டுமான பணி முடிந்து, ஆறு மாதங்களாகியும் மீன் விற்பனை அங்காடி திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் புதர்மண்டி கட்டடமும் வீணாகிறது. கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக மீதமுள்ள நிதியை ஒதுக்கீடு செய்து, அங்காடியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X