அதிக பாரம் ஏற்றிய 18 லாரிக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக பாரம் ஏற்றிய 18 லாரிக்கு அபராதம்

Added : பிப் 22, 2019
Share
திருச்சி: திருச்சி- சென்னை புறவழிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, சஞ்சீவி நகரில், திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாண்டியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அந்த வழியாக பாரம் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது, 18

திருச்சி: திருச்சி- சென்னை புறவழிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, சஞ்சீவி நகரில், திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாண்டியன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அந்த வழியாக பாரம் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது, 18 லாரிகள் விதிமீறீயிருப்பது தெரிந்தது. அதே போல், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, இரு லாரிகளையும் ஆய்வாளர்கள் மடக்கினர். தொடர்ந்து, 18 லாரிகளுக்கு, இரண்டு லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய், இரு லாரிகளுக்கு, 7,500 ரூபாய் என, 27 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X