மோடிக்கு சியோல் அமைதி பரிசு

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
மோடி, சியோல் அமைதி பரிசு, பயங்கரவாதம், புல்வாமா தாக்குதல்

சியோல் : சியோலில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர், ஐநா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மெர்கல் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.


latest tamil news
விருதினை பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மோடி, இந்த விருது தனிப்பட முறையில் எனக்கு அளிக்கப்பட்டது அல்ல. இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்ட விருது. கடந்த 5 ஆண்டுகளில் 130 கோடி இந்திய மக்கள் திறமையால் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு. மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடி வரும் சமயத்தில் இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய மக்களின் அடிப்படை தத்துவங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக இந்த விருதினை கருதுகிறேன்.


latest tamil news


Advertisementகாந்தியின் போதனைகளின் அடிப்படையிலேயே எங்களின் பணிகளை தொடர்கிறோம். இந்த விருதின் மூலம் கிடைத்த நிதியை தூய்மை கங்கை பணிக்காக பயன்படுத்த உள்ளோம். 1988 ம் ஆண்டு சியோலில் ஒலிம்பிக் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் அல் குவைதா அமைப்பு துவங்கப்பட்டது.


latest tamil news
ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உருவெடுத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் விரைவில் அமைதி பரவும். உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார். பகவத் கீதை ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி அமைதி குறித்து மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.


latest tamil news
இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.


latest tamil news
அப்போது பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா - தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு உதாரணமாக தான் இந்திய ராணுவத்தில் கே 9 வஜ்ரா சேர்க்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் மூன் ஜே இன்னிற்கு நன்றிகள்.


latest tamil news
உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து, போரிட வேண்டிய நேரம் இது. சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பில் இரு நாடுகளின் நட்புறவு மேலும் பலப்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிவகுக்கும். பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக சாலை வரைபட தயாரிப்பிற்கும், பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றார்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
22-பிப்-201923:51:32 IST Report Abuse
Vetri Vel மயான அமைதி உருவாக்க பாடுபடுகிறார்.. சரி தான்... விருதுக்கு பொருத்தமானவர்.. விவசாயிகளை ஒழித்து கட்டியாச்சு ... வேலை இல்ல திண்டாட்டம்... வரி சுமை... விலைவாசி உயர்வு... பொய் பித்தலாட்டம்... மக்கள் உயிரை விட... மயான அமைதி தானே...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
23-பிப்-201915:45:28 IST Report Abuse
TamilArasanபுலம்பல் பொன்னம்பலம்... விவசாயி அப்படி என்ன கடந்த UPA ஆட்சியில் கொழித்தார்கள் மோடி வந்து ஒழித்து கட்டிவிட்டார் என்று பொலம்புறீங்க...?? மோடிக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதையை பார்த்து வயிறு எரிகிறதா...? அடுத்த முறையும் அவர்தான் பிரதமராக வரப்போகிறார் ஆதலால் ரொம்ப வயிறு எறிந்தாள் உடம்புக்கு நல்லதில்லை... மேலும் நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய் பித்தலாட்டம்... கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட சிங்கள கடற்படையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை அதுவே உங்கள் இத்தாலி சோனியா அன்னையின் 10 ஆண்டு வரலாறை எடுத்துப்பாருங்கள் சுமார் 1000 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் காவு கொண்டது இந்த ஒரு உதாரணம் உனது பொய் பித்தலாட்ட கருத்தை தோலுரிக்க போதும்......
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
22-பிப்-201921:36:09 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இந்த விருதை வைத்து வோட்டு வாங்கமுடியுமா
Rate this:
22-பிப்-201923:04:58 IST Report Abuse
VIJAIAN CThirupathi ponna vote kedaikuma?...
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
22-பிப்-201921:28:26 IST Report Abuse
balakrishnan தலை மகன் செல்லும் இடமெல்லாம் சிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X