புல்வாமா தாக்குதலின்போது மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்?

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (58)
Share
Advertisement
காஷ்மீர், புல்வாமா, தாக்குதல், பிரதமர் மோடி, காங்கிரஸ், உத்தரகண்ட், சுர்ஜிவாலா, ரவிசங்கர் பிரசாத், அஜித் தோவல்

புதுடில்லி: ‛‛காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் நடந்த விழாவில் கலந்துகொண்டு இருந்தார்" என்றும் ‛‛பிரதமருக்கு புல்வாமா தாக்குதல் தகவலை சொல்வதில் தாமதம் ஏற்பட்டது'' என்றும் காங்., குற்றம்சாட்டி வருகிறது. உண்மையில் அப்போது மோடி என்ன செய்து கொண்டு இருந்தார் என தெரிய வந்துள்ளது.


முன்பே திட்டமிடப்பட்டது

இது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:
ஏற்கனவே திட்டமிட்டபடி வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் மோடி சென்று கொண்டு இருந்தார். அன்று காலை 7 மணிக்கு டேராடூனை அவர் அடைந்தார். பருவநிலை மோசமாக இருந்ததால் 4 மணி நேரம் மோடி காத்திருக்க வேண்டி இருந்தது.
ஜிம் பூங்காவுக்கு காலை 11.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புலிகள் சரணாலயம், சுற்றுப்புற சூழல் சுற்றுலா மற்றும் மீட்பு மையத்தை துவக்கி வைத்தார். பின், ஒரு படகில் கலஹரில் இருந்து திகாலா வனத்திற்கு சென்றார்.
பிற்பகல் 3.30 மணிக்கு மோடிக்கு புல்வாமா தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வனத்திற்குள் இருந்ததால், போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரிடம் தகவல் தெரிவிக்க 25 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news

பேரணி ரத்து

தகவல் தெரிந்ததுமே ருத்ராபூரில் நடக்க இருந்த பேரணியில் மோடி பேசும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாலை 4 மணி முதல் 4.45 வரை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோரிடம் இருந்து புல்வாமா பற்றிய தகவல்களை போனில் மாறி மாறி கேட்டபடி இருந்தார் மோடி. அதன் பிறகு தான் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
உடனே டில்லிக்கு திரும்புவதற்குத் தான் மோடி விரும்பினார். ஆனால், பருவநிலை மோசமாக இருந்ததால் அவரால் உடனே கிளம்ப முடியவில்லை.


குண்டு குழியான சாலை பயணம்


அதனால் தான் ருத்ராபூர் கூட்டத்தில் மாலை 5.15 மணிக்கு, அலைபேசியின் மூலம் பேச முடிவெடுத்தார். ஹெலிகாப்டர் பறக்கும் சூழ்நிலை இல்லாததால், டில்லி விமானத்தில் ஏற ராம்நகரில் இருந்து பெரெலி என்ற இடத்திற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார் மோடி.
டில்லிக்கு தாமதமாகத் தான் மோடியால் வர முடிந்தது. அதுவரை மோடி எதுவும் சாப்பிடவில்லை. தாமதமாக தகவல் தந்ததற்காக கோபத்திலும் அவர் இருந்துள்ளார். இதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை அஜித் தோவல் கேட்டுள்ளார்.


ரவிசங்கர் பதில்

முன்னதாக, காங்., தலைவர் ரண்தீப் சுர்ஜிவாலா, ‛‛புல்வாமா தாக்குதல் நடந்த பிற்பகல் 3.10 மணிக்கு, டிஸ்கவரி சேனல் எடுக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு, மோடி சமோசா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்" என குற்றம்சாட்டி இருந்தார்.


latest tamil newsஇந்த குற்றச்சாட்டை அப்போது மறுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‛‛புல்வாமா தாக்குதலால் உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும்போது, காங்., இப்படி பேசுவது அதன் உண்மை நிறத்தை காட்டுகிறது. காங்.,கிற்கு தெரிந்த விஷயம், எங்களுக்கு தெரியாமல் போகுமா'' என்று பதில் அளித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
23-பிப்-201907:01:07 IST Report Abuse
Anandan பிஜேபி என்னைக்கு உண்மை பேசியிருக்கு.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-பிப்-201906:45:04 IST Report Abuse
madhavan rajan காங்கிரஸ் இதை கூட தெரிந்து கொள்ளாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மோடி அவர்கள் 2014 மே மாதம் முதல் இந்தியாவின் பொறுப்பான பிரதமராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் சில இடங்களில் தோல்வி அடையும் போது அதன் கட்சித் தலைவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்டால் சரியாக இருக்குமா?
Rate this:
Cancel
Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா
23-பிப்-201906:31:22 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai பருவநிலை மோசமாக இருந்ததால் 4 மணி நேரம் மோடி காத்திருக்க வேண்டி இருந்தது. போதிய நெட்வொர்க் இன்றி, பிரதமரை தொடர்பு கொள்ள முடியவில்லை பருவநிலை மோசமாக இருந்ததால் அவரால் உடனே கிளம்ப முடியவில்லை. குண்டும் குழியுமான சாலையில் பயணம் செய்தார் மோடி.() மோடி எதுவும் சாப்பிடவில்லை. இது என்னடா பள்ளி சிறுவனை விட மிக மோசமான நொண்டி சாக்குகள். நல்ல விசாரிச்சு பாருங்க ஏதாவது நடிகையின் பிறந்த நாள், புது மனை புகு விழா போன்ற ஏதாவது நிகழச்சியில் இருந்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் சரியா போறார்.
Rate this:
23-பிப்-201908:49:07 IST Report Abuse
VIJAIAN CKanna our Rahul only will suddenly disappear from India for massages in Thailand!!!!!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X