பொது செய்தி

இந்தியா

ராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்'

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராபர்ட் வாத்ரா, அமலாக்கத்துறை

புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, அமலாக்கத் துறை அலுவலகத்தில், ஐந்தாவது முறையாக, இன்று(பிப்22) விசாரணைக்கு ஆஜரானார்.

காங்., பொதுச் செயலர், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, 50, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகளை வாங்கியதில், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில், வாத்ரா கைது செய்யப்படலாம் என்பதால், முன், 'ஜாமின்' கோரி, டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமின் வழங்க, நீதிமன்றம் மறுத்தது. ஆனால், வாத்ராவை கைது செய்ய, தடை விதித்தது. மேலும், அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படியும் தெரிவித்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு, வாத்ரா, ஏற்கனவே நான்கு முறை ஆஜரானார். அவரிடம், 26 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி ஜாம்நகர் இல்லத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், ஐந்தாவது முறையாக, இன்றும் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201903:50:52 IST Report Abuse
k balakumaran இப்படி மக்கள் பணத்தை ஆட்டையை போட்டு சொத்தை குவித்து வாழ்ந்து வந்த சொகுசான வாழ்க்கையை இவர்கள் இழக்க தயார் ஆக இருப்பார்களா?? அந்த குடும்பமே சுத்த ஏமாற்று கூட்டம். கொஞ்சம் அள்ளக்கைகளை அடிமைகள் ஆக வைத்து கொண்டு எலும்பு துண்டை எறிந்து விட்டு மீதம் முழுவதையும் அப்பி கொள்ளும் கூட்டம். குடும்ப தலைவனையோ, தலைவியையோ கூட பதவிக்காக, அற்ப சுகத்துக்காக பலி கொடுக்கும் கூட்டம் தான் பிஜேபிக்கு இன்றைய எதிர் கட்சி. சக இந்தியரை, பிரதமரை எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று எதிரி நாட்டிடம் சென்று கெஞ்சும் கூட்டம், பிரதமர் டி விற்க தான் லாயக்கு என்று கேலி செய்த அநாகரீகம் ஆன கூட்டம், நாட்டில் வறுமையை அகற்ற எதையும் செய்யாமல் இந்தியா எப்பொழுதும் வறுமையில் தான் இருந்தது என்று வக்காலத்து வாங்குபவர் இந்த கூட்டத்தின் நிதி அமைச்சர், உலகு எங்கும் சொத்துக்கள் இவருக்கும் உண்டாம். பெயரில் காந்தி என்று வைத்து கொண்டு இந்தியர்களை கடந்த 60 வருடங்களுக்கு மேல் ஏய்த்து பிழைக்கும் கூட்டம், ஏதோ இந்தியாவில் மன்னர் ஆட்ச்சி இன்னமும் உள்ளது போலவும் ஏதோ பிரதமர் பதவி தமக்கு மட்டும் தான் என்று இறுமாப்பில் திரியும் கூட்டம் எதிர் கட்சி தலைமை. எனக்கு ஏதோ சந்தேகம் ஆக உள்ளது. எதிரியிடம் இன்றைய எதிர்க்கட்சி அன்று கேட்ட உதவியை இன்று எதிரி நிறைவேற்றி இருப்பது தான் காஷ்மீரில் நடந்த படுகொலையோ என்று ஒரு சந்தேகம். துயரம் தோய்ந்த விழிகளுடன் நெஞ்சம் நிறைந்த துன்பத்துடன் உலா வரும் பிரதமர் மோடிஜியை பார்க்கும் போதும், போர் வந்தால் அப்பாவி மக்கள் அநியாயம் ஆக உயிரை இழப்பார்கள் என்ற ஆதங்கத்தில் உள்ள தேச பக்தர், தேசத்தை நாளும் பொழுதும் நேசிக்கும் தலை சிறந்த மனிதர் என்ன செய்யலாம் என்று ஆழமாக சிந்திப்பதையும் பார்க்கும் போது எப்படியான ஒரு நல்ல மனிதரை நாடு பிரதமர் ஆக பெற்று உள்ளது என்பது நன்கு புரியும். அவரே மீண்டும் இந்த கயவர்கள், மக்களை ஏமாற்றும் கூட்டத்துக்கு சிம்ம சொப்பனம் ஆக இருப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை. தாம் ஊழல் செய்ய முடியவில்லை, தடைக்கல் ஆக இருக்கிறார் பிரதமர் என்றே காது கூசும் அளவுக்கு வசை பாடுவதும், திட்டுவதும் எதிர்க்கட்ச்சி கூட்டணியினர் வேலை. சிங்கத்தை எதிர்க்க குள்ள நரிகள் கூடி உள்ளன. மீண்டும் திரு மோடிஜி தான் நாட்டின் உள்ளே உள்ள வஞ்சக குள்ள நரிகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் பிரதமர் ஆக எல்லாம் வல்ல இறைவன் உதவட்டும்.
Rate this:
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
22-பிப்-201922:02:58 IST Report Abuse
தமிழ்மைந்தன் எப்படி கேட்டாலும் ரஷ்யா,லண்டன், துபாய்,இத்தாலி போன்ற நாடுகளில் குவித்துள்ள சொத்துக்களை சொல்லாதே......இந்தியாவில் உள்ள ஒரு ஐம்பது லட்சம் கோடிகள் உள்ள சொத்தை மட்டும் சொல்லுங்கள்......இந்தியர்களுக்கு இதுவே அதிகம்.....
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
22-பிப்-201921:37:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     சார் நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் எலேச்டின் தேதிவரை நீங்கள் வரவேண்டி இருக்கும்
Rate this:
22-பிப்-201923:29:35 IST Report Abuse
VIJAIAN CAfter election Robert and all family bail members will go to prison!!!!...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X