இரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது| Dinamalar

இரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 இரண்டு பயங்கரவாதிகள் உத்தர பிரதேசத்தில் கைது

சஹாரன்பூர், உத்தர பிரதேச மாநிலத்தில், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை, போலீசார் நேற்று கைது செய்தனர்.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சஹாரன்பூர் மாவட்டம், தியோபந்தில், பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த, பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, ஒரு தனியார் விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தங்கியிருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து, உ.பி., மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஷாநவாஸ் மற்றும் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த, அகிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும், 25 வயதுக்குட்பட்டவர்கள்.அவர்களிடம் நடத்திய விசாரணை யில், கல்லுாரி மாணவர்கள் என்ற போர்வையில், விடுதியில் தங்கி, மாணவர்களை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத அமைப்பில் சேர்க்க முயன்றது தெரிய வந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
23-பிப்-201917:00:07 IST Report Abuse
R S BALA இந்த மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு எப்படி இவனுங்கல்லாம் நம்ம நாட்டுல உள்ள வரானுங்க.. இவனேயெல்லாம் விசாரிக்க என்ன இருக்கு சுட்டு தள்ள வேண்டியதுதானே ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-பிப்-201909:45:30 IST Report Abuse
Srinivasan Kannaiya பிடித்தவுடன் கொன்று இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X