பாக்., கட்டுப்பாட்டில் ஜெய்ஷ் இ முகம்மது தலைமையகம்

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை, பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.



latest tamil news




காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய ரிசர்வ் படையினர் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. ராவி, சட்லெஜ் மற்றும் பியாஸ் நதிகளின் நீரை தடுத்து நிறுத்த, இந்திய அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news





அமைப்புகளுக்கு தடை

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008 ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தலைவனாக உள்ள ஜமாத் -உத்-தாவா மற்றும் பலாஹி இன்சானியாத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று(பிப்.,21) உத்தரவு பிறப்பித்துள்ளது.


பாக்., அரசு கட்டுப்பாட்டில்


பாகிஸ்தான் அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜெய்ஷ் இ முகம்மது அலுவலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அந்தஅலுவலகத்தை நிர்வகிக்க அரசு சார்பில் ஒருவரை நியமித்து பாக்., அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rock -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201910:45:10 IST Report Abuse
Rock ஏற்கனவே பாக். அரசு தான் கட்டுபடித்தியது. இப்போ என்ன நாடகம்.
Rate this:
Cancel
23-பிப்-201909:59:30 IST Report Abuse
ஆப்பு பலே...பலே...அரசே ஏற்று நடத்தப் போகுதாக்கும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
23-பிப்-201909:56:35 IST Report Abuse
சீனி டகால்டி பக்கிஸ்தான், 3 மாசத்துல ஹபீஸ் திரும்ப தெருதெருவா ஊர்வலம் நடத்துவான், மசூத் ஹசார் திரும்ப கொக்கரிபான். இந்திய பக்கிஸ்தான் பொருளாதாரத்தை அடியோடு நசுக்கவேண்டும், சீனப்பொருட்களுக்கு 200% வரி போடவேண்டும், அப்போதான் இது நிற்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X