பதிவு செய்த நாள் :
பயங்கரவாத தாக்குதலுக்கு
ஐ.நா., கவுன்சில் கண்டனம்

புதுடில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல், ஐ.நா., கவுன்சில், கண்டனம்

பாக்., - சீனா உள்ளிட்ட நாடுகள், இந்த விஷயத்தில் கடும் நெருக்கடி கொடுத்தV போதும், அதை மீறி, கண்டன அறிக்கையை, ஐ.நா., வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாக்., பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலுக்கு, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 'பயங்கர வாதத்தை வேரறுக்க, இந்தியாவுக்கு துணை நிற்போம்' என, உறுதியளித்துள்ளன.

இந்த விவகாரத்தில், அண்டை நாடான சீனா, வழக்கம் போல், பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு

நாடுகளாக உள்ள, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை, கண்டன அறிக்கை வெளியிட ஆதரவு தெரிவித்தன. சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையில், அறிக்கை வெளியிட விடாமல் தடுக்க, பாகிஸ்தானும் முயற்சித்தது. ஐ.நா.,வுக் கான, பாக்.,துாதர், மலீஹா லோதி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரை சந்தித்து, 'புல்வாமா தாக்குதல் பற்றி அறிக்கை வெளியிட வேண்டாம்' என, வலியுறுத்தினார்.


தாக்குதல் நடந்த மறுநாளே அறிக்கை வெளியிட, கவுன்சில் தயாரானது. ஆனால் அதை, சீனா வேண்டுமென்றே தாமதப்படுத்தியது. 'அறிக்கையில், பயங்கரவாதம் பற்றியும், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பற்றியும் குறிப்பிடக் கூடாது' என, வாதிட்டது. இதற்கு, மற்ற உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாதுகாப்பு கவுன்சில், நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதல் கொடூரமானது; கோழைத்தனமானது.இந்தத் தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள், நிதியுதவி அளித்தவர்கள் என, அனைவரும்

Advertisement

கண்டுபிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், அரசுக்கும், இரங்கலையும், வேதனையையும் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், எங்கு நடந்தாலும், அதை ஏற்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


இதற்கிடையே, 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் கண்டன அறிக்கையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பெயர், பொதுவாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது; குற்றவாளி என, குறிப்பிடப்படவில்லை' என, சீனா விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமாளி - erode,இந்தியா
23-பிப்-201919:26:25 IST Report Abuse

கோமாளிஐ.நா. சபை = மிச்சர் பாய்ஸ்

Rate this:
23-பிப்-201911:27:47 IST Report Abuse

ஆப்புதுணைக்கு நின்னு என்ன செய்யப் போகிறது? பக்கிகளை ஒரு வருஷம் இல்லை ஒரு நாளாவது ஐ.நா விலிருந்து தள்ளி வெக்க முடியுமா?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-பிப்-201909:21:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎதுவுமே தனக்கு வந்தால்தான்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X