பதிவு செய்த நாள் :
'பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும் நேரம் இது'
தென் கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

சியோல்:''பயங்கரவாதத்துக்கு எதிராக, அனை வரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டிய நேரம் இது,'' என, பிரதமர் மோடி பேசினார்.

பயங்கரவாதம், தென் கொரியா, பிரதமர் மோடி


தென் கிழக்கு ஆசிய நாடான, தென் கொரியா வுக்கு, இரண்டு நாள் பயணமாக, பிரதமர் மோடி சென்றார். நேற்று காலை, தென் கொரிய அதிபர், மூன் ஜே இன் உடன் பேச்சு நடத்தினார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, பரஸ்பர நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.இந்த சந்திப்புக்குப் பின், பிரதமர் மோடி கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்கு தலில்,40 வீரர்கள் கொல்லப்பட்டசம்பவத்துக்கு, தென் கொரிய அதிபர் தெரிவித்த இரங்கலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற அவரது நிலையை வரவேற்கிறேன்.

இந்திய உள்துறை அமைச்சகம், தென் கொரிய தேசிய போலிஸ் ஏஜென்சி இடையே, ஒப்பந்தம்

கையெழுத்தாகி உள்ளது.இரு தரப்பினரும், பயங்கர வாதத்துக்கு எதிராக இணைந்து செயல்பட வழி ஏற்பட்டுள்ளது. மொழிகளைக் கடந்து, வார்த்தை களை மறந்து, உலக சமுதாயம், பயங்கரவாதத் துக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கும் நேரம் வந்து விட்டது.


பாதுகாப்புத் துறையில், இந்தியாவின் நட்பு நாடு, தென் கொரியா.இவ்வாறு அவர் பேசினார்.தென் கொரியா பயணத்தை முடிந்து, நேற்று மாலை, பிரதமர் டில்லி திரும்பினார்.

அமைதி விருதுதென் கொரியா தலைநகர் சியோலில், 1988ல், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதை நினைவுப்படுத்தும் வகையில், 1990, 'சியோல் அமைதி விருது' துவக்கப்பட்டது.இந்த விருது, ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் செயலர், கோபி அன்னான், ஜெர்மன் பிரதமர், ஏஞ்சலா மெர்க்கல் உட்பட, 13 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான விருதுக்கு, பிரதமர்மோடி தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி, தென் கொரியா அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஏழை, பணக்காரர் இடையிலான, சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காக வும், உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும், இந்திய பிரதமர் மோடிக்கு, சியோல் அமைதி விருது

Advertisement

வழங்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, பிரதமர் மோடிக்கு, நடந்த நிகழ்ச்சியில், சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.


இந்த விருது, 1.4 கோடி ரூபாய் பரிசுத் தொகை உடையது. இந்த விழாவில், மோடி பேசிய தாவது: இந்த விருது, தனிப்பட முறையில் எனக்கு அளிக்கப்பட்டது அல்ல; இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்டதாகவே இதை கருதுகிறேன். மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சமயத்தில், இந்த விருது கிடைத்துள்ளது.


இந்திய மக்களின் அடிப்படை தத்துவங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, இந்த விருதை கருதுகிறேன். இந்த விருதின் மூலம் கிடைத்த நிதியை, துாய்மை கங்கை பணிக்காக பயன் படுத்த உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-பிப்-201900:16:21 IST Report Abuse

Pugazh V"10 ஆண்டு வரலாறை எடுத்துப்பாருங்கள் சுமார் 1000 தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் காவு கொண்டது"/ மாபெரும் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு இதுதான். பாஜக வா கொக்கா? பொய்களை சரளமாக சொல்வதில் நிபுணர்கள்.

Rate this:
blocked user - blocked,மயோட்
24-பிப்-201908:40:41 IST Report Abuse

blocked userபொய் சொல்ல சொல்லியா கொடுக்கவேண்டும்... கொத்துக்கொத்தாக தமிழர்களை ஒழித்துக்கட்டி பொழுது உங்க ஆட்சிதான் இருந்தது? ...

Rate this:
23-பிப்-201919:22:13 IST Report Abuse

ஆப்புஎன்னது எதிர்த்து போரிடணுமா? போரிடாம இருப்பதுக்குத் தானே அமைதிப் பரிசு குடுத்திருக்காங்க.

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
23-பிப்-201917:20:21 IST Report Abuse

தமிழ்மைந்தன் ஊழலுக்கான விருது விரைவில் உருவாக்க ஐ.நா திட்டமிட்டு உள்ளது....இந்த விருது 1967 முதல் வழங்கப்பட உள்ளது.......இதில் திமுக கட்சிக்கும் தவிர காங்கிரஸ் கம்பெனிக்கும் மட்டுமே கிடைக்கும்....அஇஅதிமுகவில் சிலருக்கு வாய்ப்பு உண்டு.....

Rate this:
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201921:23:03 IST Report Abuse

மலரின் மகள்கள் போட்டி மிக பலமானதாக இருக்கும். வெற்றி பெறுவோரை தீர்மானிப்பது மிக மிக கடினம். ...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X