கவுரவ கொலை: கோர்ட் உத்தரவு| Dinamalar

கவுரவ கொலை: கோர்ட் உத்தரவு

Added : பிப் 22, 2019
Advertisement

புதுடில்லி, -கலப்பு திருமணம் செய்த, 12 ஜோடிகளுக்கு, தங்குவதற்கு இடமும், பாதுகாப்பும் வழங்குவது தொடர்பாக, பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.டில்லியில், 'லவ் கமாண்டோ' என்ற பெயரில், தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வந்தது. இவர்கள், முறையான உரிமம் மற்றும் அனுமதி பெறாமல் நடத்தி வந்த தங்கும் விடுதியில், கலப்பு திருமணம் செய்த, 12 ஜோடிகள், பாதுகாப்பு கருதி தங்கி இருந்தனர்.தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இது தொடர்பாக, டில்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விடுதியில் இருந்த, 12 கலப்பு திருமண ஜோடிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.தங்கள் குடும்பத்தினரால், கவுரவ படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், இவர்கள் அந்த விடுதியில் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, டில்லி பெண்கள் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஜாதி மற்றும் மதம் மாறி, கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பாதுகாப்பு வழங்க வேண்டும் என, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன் அடிப்படையில், இந்த, 12 ஜோடிகளுக்கும், தங்கும் வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இது தொடர்பாக, அந்த ஜோடிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய மற்றும் டில்லி அரசுகள் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X