அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, உடல்நலம் விசாரித்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கூட்டணிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

 விஜயகாந்துடன்,ஸ்டாலின்,சந்திப்பு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார். அவரை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினி ஆகியோர் சந்தித்தனர்.இவர்களை தொடர்ந்து, நேற்று பிற்பகல், 1:20 மணிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்றார்.


தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர், அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.ஸ்டாலினுடன், தி.மு.க., - எம்.எல். ஏ., மா.சுப்பிரமணியன் மட்டுமே வந்திருந்தார். விஜயகாந்திடம் உடல்நலம் குறித்து,ஸ்டாலின் விசாரித்தார்.உடல்நலம் குன்றியிருந்த நிலை யிலும், கருணாநிதி சமாதிக்கு வந்து, அஞ்சலி செலுத்தியதற்காக, விஜயகாந்துக்கு,ஸ்டாலின் நன்றிதெரிவித்தார். ஸ்டாலினுக்கு, குடிக்க தண்ணீர் கொடுத்தார் பிரேமலதா.


பின், மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு, விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், ஸ்டாலின் ஆகியோர் மட்டும், 15 நிமிடங்கள் பேசினர். அப்போது, தி.மு.க., கூட்டணியில்

சேருவதற்கு, ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தெரி கிறது. தே.மு.தி.க.,விற்கு, ஐந்து தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா, 'சீட்' தருவதாக உறுதி தரப்பட்டதாக வும் கூறப்படுகிறது.இது குறித்து கலந்தாலோசித்து, இரண்டு நாளில் முடிவை தெரிவிப்பதாக, ஸ்டாலினிடம் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சந்திப்புக்கு பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:விஜயகாந்திடம் உடல்நலம் விசாரிக்க வந்தேன். நாங்கள், நீண்ட நாட்களாக நண்பர்களாக இருப்பவர்கள்.என்னை விட, ஒரு வயது மூத்தவராக இருந்தாலும், என்னை, அண்ணன் என்று, அன்போடு அழைப்பார். கருணாநிதியிடமும், அளவு கடந்த பாசமும், பக்தியும், விஜயகாந்த் கொண்டிருந்தார். அமெரிக்காவில் இருந்து, கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர் வெளியிட்ட வீடியோ இன்றும் நிழலாடுகிறது. சென்னை திரும்பியதும், நேரடியாக சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தினார்.

இதில் இருந்தே, எந்த அளவிற்கு, கருணாநிதி மீது, அவர் பக்தி வைத்திருந்தார் என்பதை, அறிய முடிந்தது. இப்போது, நல்ல முறையில், விஜயகாந்த் உடல்நலம் தேறி வந்துள்ளார்.அவர் ஆரோக்கிய மாக வாழ்ந்து, நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும். அரசியல் பேசுவதற்காக, இங்கு வரவில்லை; மனிதாபிமான உணர்வுடன், நலம் விசாரிக்க வந்தேன். தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி சேருமா என்று, கேள்வி எழுப்பிய, உங்கள் நல்லஎண்ணத்திற்கு, என் நன்றி.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

விரைவில் நல்ல முடிவு!''கட்சியின் நலன் கருதி, கூட்டணி தொடர்பாக,நல்ல முடிவை எடுக்க இருக்கிறோம்,'' என, தே.மு.தி.க.,

Advertisement

பொருளாளர் பிரேமலதா கூறினார். அவர் அளித்த பேட்டி:கூட்டணி பேச்சில், எந்த இழுபறியும் இல்லை. சொல்லும் வார்த்தை யில் தான் பிரச்னை இருக்கிறது. தே.மு.தி.க., வின் ஓட்டு வங்கி பலம் தெளிவாக தெரியும். எங்கள் பலத்திற்குரிய தொகுதிகள் வரும். கட்சியின் நலன் கருதி, கூட்டணி தொடர்பாக, நல்ல முடிவெடுக்க யோசித்து வருகிறோம். விரைவில், நல்ல முடிவை, விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


உடையில் மாற்றம்!

சென்னையில், நேற்று காலை, நடிகர் ரஜினி யுடன் நடந்த சந்திப்பின் போது, விஜயகாந்த், 'பேன்ட்' அணிந்திருந்தார். அதன்பின், ஓரிரு மணி நேரத்தில், ஸ்டாலின் சந்திக்க வரும் போது, விஜயகாந்த், அரசியல் தலைவர் போல், கட்சி கரை வேட்டிக்கு மாறினார். ரஜினியுடன் நடந்த சந்திப்பில், அரசியல் இல்லை என்பதால், 'பேன்ட், சர்ட்' அணிந்திருந்தார்; ஸ்டாலினுடன் நடந்த சந்திப்பு, முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால், வேட்டி, சட்டைக்கு மாறினார் என, விஜயகாந்த் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
26-பிப்-201905:42:16 IST Report Abuse

Manianபாவம் விஜயகாந்த் - பெரிய எழுத்திலே போர்டுலே எழுதின வசனத்தையாவது பேசுவாரு, தொளபதிக்கு அதுவும் தெறியாதே. அப்போ எப்படித்தான் இரெண்டு பேரும் பேசிக்கிட முடியும்- ஒரிஜினல் எம்ஜிஆரை அடிப்பொடி அய்யாறப்பன், ஆண்டிமடம்

Rate this:
oce - tokyo,ஜப்பான்
24-பிப்-201908:25:04 IST Report Abuse

oceஇப்போ விஜயகாந்த் ரொம்ப ஸ்டெடியா ஸ்டாலினுடன் உட்கார்ந்திருக்கார்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-பிப்-201921:13:50 IST Report Abuse

Pugazh Vதனிமனித விமர்சனம் வழக்கம் போல. இப்போது பிச். எடுக்க சுடலை போனார் என்று எழுதுகிறார்.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X