பரிமாற்ற திட்டத்தில் மாற்றம் அவசியம்! கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரிமாற்ற திட்டத்தில் மாற்றம் அவசியம்! கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

Added : பிப் 22, 2019
Advertisement

உடுமலை:அரசு பள்ளிகளுக்கான பள்ளி பரிமாற்றத்திட்டத்தை, தொடர்ந்து ஆறு நாட்கள் நடத்த, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கு புதுமையான சூழல், மற்ற பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிந்து கொள்ள, பள்ளி பரிமாற்றத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் படி, கிராமப்புற பள்ளிகளில் உள்ள மாணவர்கள் நகரப்பகுதி பள்ளிக்கும் நகரப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற பள்ளிகளுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். இரண்டு வெவ்வேறு சூழல்களில் உள்ள கல்விநிலை, பள்ளிகளில் உள்ள வசதிகள், அப்பள்ளிகளில் பின்பற்றப்படும் கற்பித்தல் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு செல்கின்றனர்.மொத்தமாக ஒரு பள்ளிக்கு இத்திட்டத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வேறு,வேறு பள்ளிகளுக்கு செல்கின்றனர்.நீண்ட இடைவெளி விட்டு, அடுத்த நிகழ்வுக்கு செல்வதால், கற்றுக்கொண்டதையும் அறிந்ததையும், மறுமுறை செல்லும் போது மாணவர்கள் மறக்கின்றனர். இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு தொடர்ந்து இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'பள்ளி பரிமாற்ற திட்டத்தின் முதல் வகுப்பு, கல்வியாண்டின் துவக்கத்தில் நடந்தால், இறுதி வகுப்புகள், இறுதியில் நடக்கிறது. இதனால், மாணவர்கள் முதல் வகுப்பில் கற்றுக்கொண்டதை, மூன்றாவது வகுப்பிலேயே மறந்துவிடுகின்றனர். இதனால், மாணவர்களை ஒருங்கிணைத்து, அந்தந்த பள்ளிகளின் சார்பில், வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆறு நாட்கள் தொடர்ந்து, அழைத்து செல்ல, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X