சரிந்து வரும் திருமூர்த்தி அணை நீர் மட்டத்தால்...அதிகரிக்கும் இடைவெளி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரிந்து வரும் திருமூர்த்தி அணை நீர் மட்டத்தால்...அதிகரிக்கும் இடைவெளி!

Added : பிப் 22, 2019
Advertisement
  சரிந்து வரும் திருமூர்த்தி அணை நீர் மட்டத்தால்...அதிகரிக்கும் இடைவெளி!

உடுமலை:திருமூர்த்தி அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் சுற்றுக்கு இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜன., 5ல் தண்ணீர் திறக்கப்பட்டு, ஐந்து சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.முதல் சுற்று, ஜன., 26ல் நிறைவு செய்யப்பட்டு, ஏழு நாட்கள் இடைவெளியில், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால், இடைவெளி அதிகரித்தது. பிப்.,5ல் இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.சிக்கல் தொடர்கதைகோடைக்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், 124 கி.மீ.,துாரம் உள்ள பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்களில், தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது. இதனால், கடைமடை நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேராமல் விவசாயிகள் பாதித்து வருகின்றனர். கடுமையான வெயில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், நீர் ஆவியாவதும், பகல் நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால், விரைவில், வறண்டு விடுகிறது.வரத்து குறைவு; அழுத்தமில்லை!திருமூர்த்தி அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, வினாடிக்கு, 900 கன அடி வரை நீர் வரத்து இருக்கும். மழை பொழிவு குறைந்து, ஏழு மாதமாக மழையில்லாததால், ஆழியாறு பாசனம், கேரளாவிற்கு தண்ணீர் தரப்படுகிறது.தொகுப்பு அணைகளிலிருந்து, ஆழியாறு அணைக்கும் தண்ணீர் தரப்படுவதால், திருமூர்த்தி அணைக்கு ஒரு வாரமாக நீர் வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு, 500 கன அடி மட்டுமே நீர் வருகிறது. பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வழங்கப்படுவதால், அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், 27.65 அடி நீர் மட்டம் உள்ளது.நீர் மட்டம் குறைந்துள்ளதால், பிரதான கால்வாயில் செல்லும் நீரின் அழுத்தம், வேகம் குறைந்துள்ளது. கிளைக்கால்வாய்களில் மெதுவாக செல்வதால், ஆவியாதல் அதிகரித்துள்ளது. இதனால், கடை மடை நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறியதாவது: தொகுப்பு அணைகளிலிருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் செல்வதால், திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. வரும், 27 ம் தேதி வரை, இரண்டாம் சுற்று நீர் முழுமையாக தரலாம். நீர்மட்டம் குறைவால், அழுத்தம் குறைந்து, கால்வாயில் நீரின் வேகம் குறைந்துள்ளது.இரண்டாம் சுற்று முடியும் போது, அணை நீர் மட்டம், 18 அடியாக குறையும் வாய்ப்புள்ளது. அதனால், 50 அடிக்கு மேல் நீர் சேகரிக்கப்பட்ட பிறகே, மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க முடியும். இதனால், ஐந்து நாள் கால இடைவெளி, 10 முதல் 12 நாட்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X