மவுன அஞ்சலி ஊர்வலம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மவுன அஞ்சலி ஊர்வலம்

Added : பிப் 22, 2019
Advertisement

உடுமலை:பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு, உடுமலையில் அஞ்சலி ஊர்வலம் நடந்தது.காஷ்மீரில், இந்திய ராணுவ வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், தேசம் காக்க வீர மரணமடைந்த வீரர்களுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று, உடுமலை அனைத்து வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் மற்றும் போடிபட்டி இமயம் நலச்சங்கம் சார்பில் அஞ்சலி ஊர்வலம் நடந்தது. குட்டை திடலில் துவங்கிய ஊர்வலம், பிரதான வீதிகள் வழியாக வந்து, பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. தொடர்ந்து, மலர் துாவி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X