துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல வீரருக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல வீரருக்கு தடை

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை, துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக, துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல, தமிழக வீரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு ஆசிய நாடு களில் ஒன்றான, கத்தார் நாட்டின் தலைநகர், தோகாவில், சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி, நேற்று துவங்கியது; மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இதில், இந்தியா சார்பில், 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த, பிரித்வி தொண்டைமான் என்ற ஆண் வீரரும் ஒருவர்; தேசிய தர வரிசையில், முதல் இடத்தில் உள்ளார்.இவர், 21ம் தேதி அதிகாலை, 1:00 மணிக்கு, சென்னையில் இருந்து தோகா செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் செல்ல, பன்னாட்டு முனையம் வந்தார். துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என, பிரித்வியை விமானத்தில் ஏற்ற, விமான நிறுவனத்தினர் மறுத்து விட்டனர்.இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், துப்பாக்கி எடுத்துச் செல்ல, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் ஜெனரலிடம், சிறப்பு அனுமதி சான்று பெறப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்களை காட்டிய பிறகும், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை.இந்நிலையில், அந்த போட்டியில் பங்கேற்கும், இந்தியாவைச் சேர்ந்த மற்ற வீரர்கள், டில்லியில் இருந்து, தோகாவுக்கு துப்பாக்கியுடன் பயணிக்க, அதே விமானத்தில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், சென்னையில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, விமான நிறுவன அதிகாரிகளுடன், பிரித்வி வாக்குவாதம் செய்தார். அதற்கு பயன் இல்லாமல் போனதால், விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.டி.ஜி.சி.ஏ., உயரதிகாரிகளிடம், இந்திய ரைபிள் சங்கம் சார்பில், புகார் அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, நேற்று பிற்பகல், பிரித்வி தொண்டைமானுக்கு, விமான நிறுவனம் அழைப்பு விடுத்தது. நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, தோகா செல்லும் விமானத்தில் செல்ல அனுமதி அளித்தது.இதையடுத்து, பிரித்வி தொண்டைமான், ஒரு நாள் தாமதமாக, நேற்று அதிகாலை, தோகா சென்றார்.இது குறித்து, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:திட்டமிட்டபடி, வியாழன் அதிகாலை நான் சென்றிருந்தால், பயிற்சி போட்டியில் பங்கு பெற்றிருப்பேன். சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட குளறுபடியால், பயிற்சி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. நேரடியாக, போட்டியில் தான் கலந்து கொள்ள முடியும். ஆனாலும், இந்த சம்பவத்தை மறந்து, போட்டியில் முழு கவனம் செலுத்தி, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்.இவ்வாறு, பிரித்வி கூறினார்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201903:49:47 IST Report Abuse
Bhaskaran உலகிலேயே நமது சென்னை விமானநிலைய அதிகாரிகளைப்போல் விவரமான வர்கள் கிடையவே கிடையாது தத்தி பிண்டங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X