ரேஷன் கடையில் கேமரா செயலுக்கு வருவது, 'டவுட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் கேமரா செயலுக்கு வருவது, 'டவுட்'

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement



ரேஷன் கடைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, கூட்டுறவு சங்கங்கள் கைவிரித்துள்ளன.ரேஷன் கடைகளை கண்காணிக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.முதல் கட்டமாக, 1,500 ரேஷன் கார்டுகளுக்கு மேலுள்ள, 416 கடைகளில், கேமராக்களை பொருத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது. இந்த பணிகளை, ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இந்த சூழலில், கூட்டுறவு சங்க செலவில், ரேஷன் கடைகளில், கேமரா பொருத்துமாறு, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. கேமராக்கள் பொருத்தினாலும், ஊழியர்கள் பழுதாக்கி விடுவர்.இத்திட்டம், சோதனை ரீதியாக துவக்கிய நிலையில், வெற்றி பெறவில்லை. எனவே, கேமராக்கள் பொருத்தும் செலவை, அரசு ஏற்க வேண்டும்; இல்லையெனில், கேமரா பொருத்த முடியாது.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
23-பிப்-201916:46:10 IST Report Abuse
R S BALA ஹி.. ஹி.. பூனைக்கு மணி கட்ற கதை இதுதானோ?
Rate this:
Share this comment
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
23-பிப்-201915:06:14 IST Report Abuse
Ramachandran Rajagopal ரேஷன் கடைகளுக்கு இறக்கும் முட்டை சரக்குகளை எடைபோட்டு இறக்க வேண்டும் என எந்த நீதிமன்றமும் சொல்வது இல்லை.எடைபோட்டு இறக்க மறுத்ததால் திருப்பி அனுப்பிய என்னை ஊழல் மிக்க அதிகாரிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றிவிட்டனர். முப்பது ஆண்டுகளாக போராடி வருகிறேன். நீதிபதிகளே கேட்கிறார்கள் ஏன் நீ கொத்தடிமையாக வேலை செய்ய மறுத்தாய் அதனால் ஒரு பரிகாரமும் இல்லை நீ செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எனச் சொல்லும் நீதிபதிகளைக் கொண்ட நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குவதில் வியப்பொன்றும் இல்லை. அத்தகைய நீதிபதிகளில் ஒருவரை தமிழ்நாடு சட்டக் கமிசன் தலைவராக்கி உள்ளனர் அரசியல் வாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201906:32:25 IST Report Abuse
Bhaskaran ஊழியர்கள் பழுதாக்கிவிடுவார்கள் என்னஒரு கடமை உணர்வு கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X