மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணிக்கவேலுக்கு எதிரான மனு தள்ளுபடி

Added : பிப் 22, 2019
Advertisement

சென்னை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு, பணி ஓய்வு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி.,யாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பத்திரிகையாளர், சேகர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:குஜராத் மாநிலத்தில் உள்ள, சாராபாய் அறக்கட்டளையில் இருந்து, ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் உண்மையானவை இல்லை என்றும், பொன் மாணிக்கவேல் விசாரணையில் நடந்த தவறுகள் குறித்தும், சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, செய்திகள் வெளியாகின.இந்த வழக்கு விசாரணையில் உள்ள போதே, ஐ.ஜி., பணியில் இருந்து, பொன் மாணிக்கவேலை, பணி ஓய்வு பெற அனுமதித்தது தவறு; அவர் மீது, சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிர மணிய பிரசாத் அடங்கிய அமர்வு, 'உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது' எனக்கூறி, தள்ளுபடி செய்தது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X