ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு : ராமதாஸ் வலியுறுத்தல்

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை, 'தமிழகத்தில், ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், நடைமுறையில் உள்ள, 69 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தன. அப்போது, 'இடஒதுக்கீட்டிற்கு, 50 சதவீதம் உச்சவரம்பு உள்ள நிலையில், தமிழகத்தில், 69 சதவீதம், எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மக்கள் தொகை அடிப்படையிலும், இட ஒதுக்கீடு பிரிவினரின், கல்வி மற்றும் சமூக நிலையை கருதியும் தான், 69 சதவீதம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விபரங்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதன் வாயிலாக மட்டுமே, 69 சதவீதம் இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும்.எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
27-பிப்-201906:13:41 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்தாளுக்கு சாதியேதான் குறி இவனெல்லாம் சாதியவச்சுதான் இந்தாளு பார்ட்டியே நடத்துறார். பணக்காரர் ஒரு சாதி ஏழை மற்ற சாதி நடுவாந்திரம் என்று ஒருகரூப் இருக்கே அதுதான் இந்த ராமதாசனின் குறி
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
23-பிப்-201906:33:22 IST Report Abuse
 Muruga Vel ஜாதிகள் இல்லையடி பாப்பா … பாரதி பாடிய பாட்டு .. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கே ஒதுக்கீடு என்று எல்லா சமுதாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் .. ஜாதி அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுப்பதால் மாணவர்கள் அமேரிக்கா சென்று அவர்கள் பொருளாதாரத்தை வளர்க்கிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201906:15:23 IST Report Abuse
Bhaskaran தேர்தல் நேரம் எதையாவது பேசவேணும் இதைத்தான் சுடாலின் வேறமாதிரி பேசுவாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X