அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (45)
Advertisement
 அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல  திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ''திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற, பா.ம.க., தற்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க., திராவிட கட்சி அல்ல என, வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.சென்னை வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர், சுதர்சனம் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:மாம்பழம் தொழில் செய்து முன்னேறியவர், சுதர்சனம். ஆனால், மாம்பழத்தை வைத்து, இன்று எப்படிப்பட்ட வருமானங்கள் எல்லாம், நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது, மக்களுக்கு நன்றாக தெரியும்.மணமக்கள் குடும்பத்தினர், இப்போது கூட்டணி அமைத்துள்ளனர்.இந்த கூட்டணி, சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எந்த அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் ஆசைக்கும் இவர்கள் ஆட்படக் கூடாது.நாட்டில், சில கூட்டணி கட்சிகளைப் பார்க்கும் போது, எப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என, சிந்தித்து பார்க்க வேண்டும்.திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றவர்கள், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துஉள்ளனர்.இதனால், அ.தி.மு.க., இன்றைக்கு திராவிட கட்சி இல்லை என்பதை, நாட்டிற்கு வெளிப்படையாக சொல்லி விட்டனர். ஒரு சந்தர்ப்பவாத, தேசதுரோக, மக்கள் விரோத கூட்டணி அமைத்துள்ளனர். அவர்கள் அமைத்தது மக்கள் நல கூட்டணி அல்ல; பண நலக் கூட்டணி.அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் தான் கொள்ளை அடிக்கிறது என்று பார்த்தால், கடல் தாண்டியும் கொள்ளை அடித்துள்ளது.இங்கு, அமெரிக்க நிறுவனம் தொழில் துவங்க, வெளிநாட்டு கரன்சிகளையும் கொள்ளை அடிக்கின்றனர்.இது சம்பந்தமாக, அமெரிக்காவில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளை தண்டிக்க, நீதிமன்றம் வரை சென்று போராடுவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.



வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
24-பிப்-201914:31:03 IST Report Abuse
dandy கட்டுமரம் மரண வீட்டில் கூட அரசியல் பேசி அசிங்கம் வளர்த்தவர்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-201904:55:03 IST Report Abuse
J.V. Iyer குடும்ப முன்னேற்ற கழகமே திராவிஷ கட்சி.
Rate this:
Share this comment
Cancel
Sridharan Venkatraman - Chennai,இந்தியா
23-பிப்-201920:54:57 IST Report Abuse
Sridharan Venkatraman தி க வுக்கு வீரமணிக்கு சொல்லி இருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X