சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதி பதவியேற்பு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதி பதவியேற்பு

Added : பிப் 22, 2019
Advertisement

சென்னை,சென்னை உயர்நீதிமன்றத்தின், புதிய கூடுதல் நீதிபதியாக, செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று பதவியேற்றார். அவருக்கு, தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 1966 அக்டோபரில் பிறந்தார். சென்னை சட்ட கல்லுாரியில், 1990ல், சட்ட படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், பல மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கறிஞராக இருந்துள்ளார். இவரை, உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமீபத்தில், உத்தரவிட்டார்.இதையடுத்து, கூடுதல் நீதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று நடந்தது. செந்தில்குமார் ராமமூர்த்திக்கு, தலைமை நீதிபதி, வி.கே.தஹில் ரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.செந்தில்குமார் ராமமூர்த்தியை வரவேற்று, அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர். பின், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏற்புரையாற்றினார். விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்பை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை, 75. தற்போது, 15 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X