ஜெயலலிதா சிகிச்சை விசாரணையை ஆறுமுகசாமி தொடர அனுமதி - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., சிகிச்சை விசாரணையை ஆறுமுகசாமி தொடர அனுமதி

Added : பிப் 22, 2019
Advertisement

சென்னை, 'ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோ மருத்துவமனை அளித்த, சிகிச்சை தொடர்பான விசாரணையை, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தொடர லாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.ஜெ., மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்தது.ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, இந்த கமிஷன் விசாரிக்க தடை விதிக்க கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள், ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறுமுகசாமி கமிஷன் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க, கூடுதல் அவகாசம் கோரினார்.அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும், 'ஆறுமுகசாமி கமிஷன், தன் விசாரணையை தொடர தடையில்லை' எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X