சனிக்கிழமை பிரதமர் ஸ்டாலின்: பா.ஜ., தலைவர் அமித் ஷா கிண்டல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை பிரதமர் ஸ்டாலின்
பா.ஜ., தலைவர் அமித் ஷா கிண்டல்

மதுரை: ''மத்தியில், காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சனிக்கிழமை மட்டும், பிரதமராக ஸ்டாலின் இருப்பார்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.

சனிக்கிழமை, பிரதமர், ஸ்டாலின், பா.ஜ., தலைவர்,அமித் ஷா

லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, அனைத்து மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 18 தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

பெங்களூரில் இருந்து, தனி விமானம் மூலம் மதுரை வந்த, அமித் ஷா இதில் பங்கேற்றார். தொடர்ந்து, ராமநாதபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:மோடி மீண்டும் பிரதமராக நடக்கும் யுத்தத்தில்,

தே.ஜ., கூட்டணி, தமிழகத்தில், 35க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்தியில், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த, காங்., - தி.மு.க., கூட்டணியால், தமிழகத்திற்கு நல்லதுசெய்யமுடியாது.

மீண்டும் ஊழல்தான் செய்வர். ஹெலிகாப்டர், நிலக்கரியில் ஊழல் செய்தவர்களால் நாட்டிற்கு நல்லது செய்ய முடியாது. தி.மு.க., - காங்., என்றால் ஊழல் தான்.'மோடி அரசு, தமிழக நலனுக்கு என்ன செய்துள்ளது' என, ஸ்டாலின்கேட்டுள்ளார்.


ஸ்டாலினுக்கு கணக்கு ஒப்புவிக்க அவசியமில்லை முந்தைய பத்தாண்டு கால, ஐ.மு., கூட்டணி ஆட்சி யில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? அதற்கு தமிழக மக்களுக்கு கணக்கு தாருங்கள். அவர்களால் நிச்சயம் கொடுக்க முடியாது. அவர்களிடம் இருப்பது ஊழல் கணக்கு. உங்கள் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்பதை, தமிழக மக்களுக் கும், இந்த நாட்டு மக்களுக்கும் நீங்கள் சொல்ல வேண்டும்.


உங்களது பிரதமர் வேட்பாளர் யார்? யாராவது ஒருவர் வரத்தானே வேண்டும். அது யார் என நான் சொல்லட்டுமா?திங்கள் - மாயாவதி, செவ்வாய் - அகிலேஷ், புதன் - சந்திரபாபு நாயுடு, வியாழன் -

Advertisement

தேவகவுடா,வெள்ளி - மம்தா, சனி - ஸ்டாலின். ஞாயிறு அன்று பிரதமரே கிடையாது; நாடே பந்த். இப்படி நாட்டை வழிநடத்த முடியுமா?

மோடி மீண்டும் பிரதமராக இருப்பார். உலக அரங்கில், நாட்டின் புகழை உச்சத்திற்கு எடுத்து செல்லும் பணியை மோடி செய்து உள்ளார்.ஒரு நாளில், 18 மணி நேரம், மக்களுக்காக உழைக் கிறார். அவருக்கு எதிராக, ஊழல் குற்றச்சாட்டு இல்லை.


மோடி பிரதமராக, மீண்டும் வாய்ப்பு அளித் தால், சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உயரும். தமிழகம், முதன்மை மாநிலமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (36+ 51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-பிப்-201921:03:38 IST Report Abuse

Pugazh V. இதுமாதிரி எதிர் கட்சிகள் பேசியிருந்தால்......???

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
23-பிப்-201919:32:33 IST Report Abuse

Tamilselvanசுடலை முதல்வர் கூட ஆக மாட்டார். சட்டையை கிழித்து கொள்வார்

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
23-பிப்-201917:42:44 IST Report Abuse

Rajathirajaதமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாத உங்கள் அரசை விட ஊழல் செய்யும் அரசியல்வாதிகளே மேல். நீங்கள் சொல்லும் அந்த ஊழல்வாதிகளின் ஆட்சியில் தான் சென்னைக்கு மெட்ரோ ட்ரெயின், மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவ மனைகள், மருத்துவ காப்பீடு (இதை தான் நீங்கள் இப்பொழுது காப்பியஅடித்துளீர்கள்.) என மேலும் பல.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
24-பிப்-201914:20:42 IST Report Abuse

dandyகட்டடம் கட்டுவதில் தானே கட்டுமரம் பணம் கண்டார் ..கல்வி தரங்கள் ..கட்டட உறுதி எல்லாம் இரண்டாம் பட்ச்சம் .உங்கள் கல்வித்தகுதியை ஆபிரிக்க நாடுகள் கூட ஏற்றுக்கொள்வதில்லை...

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X