தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை: தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை: தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 22, 2019
Advertisement
 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை: தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வால்பாறை,:வால்பாறையில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வசதிக்காக, வால்பாறை நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் கட்ட வேண்டும்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்களை புதுப்பிக்க வேண்டும்.வனவிலங்கு - மனித மோதலை தடுக்க குடியிருப்பு பகுதியை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு அந்தந்த எஸ்டேட் நிர்வாகம் நஷ்டஈடாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறை நகரில் எஸ்டேட் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, சவுந்திரபாண்டின் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) வீரமணி (வி.சி.,) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யு.சி., பொதுசெயலாளர் கருப்பையா வரவேற்றார்.அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அமீது தலைமை வகித்தார். ஒரு வாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும்.கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும், என, அறிவிக்கப்பட்டது. கண்டன ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X