கிணற்றில் தவித்த புள்ளிமான்: வனத்துறையிடம் ஒப்படைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவித்த புள்ளிமான்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

Added : பிப் 22, 2019
Advertisement

நெகமம்:நெகமம் அருகே, கிணற்றில் விழுந்து தத்தளித்த புள்ளிமானை மீட்டு, வனத்துறையிடம் விவசாயிகள் ஒப்படைத்தனர்.நெகமம் அடுத்த, ஆவல்பட்டி உப்புத்தோட்டத்தை சேர்ந்தவர் தண்டபாணி; ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர். நேற்று பகல், 11:30 மணிக்கு தோட்டத்து கிணற்றில், புள்ளி மான் ஒன்று, தத்தளித்துக்கொண்டிருந்தது கண்டு ஆச்சரியமடைந்தார்.அங்கிருந்தவர்கள், கிணற்றில் தத்தளித்த மானை மீட்டனர். மான் துள்ளிக்குதித்து ஓடாமல் இருக்க, கால்களில் கயிறு கட்டி பாதுகாத்தனர். பொள்ளாச்சி வனத்துறையினர் ஆவல்பட்டிக்கு சென்று, புள்ளிமானை மீட்டனர்.அதேபோன்று, ஆனைமலை அடுத்த ஆழியாறு புளியங்கண்டி பகுதியில், மான் ஒன்று நாய்கள் கடித்த நிலையில் விளைநிலங்களுக்குள் சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.வனத்துறையினர் மானை மீட்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'மீட்கப்பட்டது, மூன்று வயதுள்ள சாம்பார் மான். நாய்கள் கடித்து காயத்துடன் இருந்த, மானுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு, நவமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டது,' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X