மனைவி நடத்தையில் சந்தேகம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி நடத்தையில் சந்தேகம்

Added : பிப் 22, 2019
Advertisement

கோட்டூர்:ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அமர்நாத்பிரசாத், 35. இவரது மனைவி கவிதா, 33. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கோபமடைந்த அமர்நாத்பிரசாத், கவிதாவை அரிவாளால் வெட்டினார்.அதன்பின், கையை தனக்குத்தானே வெட்டிக்கொண்டு, மன விரக்தியில் பூச்சி மருந்தையும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த கவிதா கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அமர்நாத்பிரசாத் ஆனைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.கோட்டூர் போலீசார் கூறுகையில், 'கவிதா ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அமர்நாத்பிரசாத் உடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது, நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கவிதாவை அரிவாளால் அமர்நாத்பிரசாத் வெட்டினார்,' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X