இரண்டு கிலோ தங்கம் மீட்பு: மேலும் இருவருக்கு தொடர்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு கிலோ தங்கம் மீட்பு: மேலும் இருவருக்கு தொடர்பு

Added : பிப் 22, 2019
Advertisement

கோவை:கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளில், இரண்டு கிலோ தங்கம், வைர நகைகள் மீட்கப்பட்டன.கோவை, தியாகராய புது வீதியை சேர்ந்த நவல்குமார் மொரீசா, 46, பார்சல் கூரியர் சர்வீஸ் நிறுவனம் வைத்துள்ளார். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரித்வி சிங், 26, கடந்த, 7ம் தேதி, 2 கோடி ரூபாய் மதிப்பு நகைகளை, மும்பைக்கு அனுப்ப, விமான நிலையம் கொண்டு சென்றார். இவரை தாக்கிய மூவர், நகைகளை கொள்ளையடித்து தப்பினர்.பீளமேடு போலீசார், ஆறு தனிப்படைகள் அமைத்து, தொண்டாமுத்துாரில் பதுங்கியிருந்த, கூரியர் நிறுவன ஊழியர், பிரவீனா, 32, அவரது கணவர் தினகரன், 35, நரசீபுரம் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.பிரவீனாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு. அங்குள்ள, அவரது தாய் வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் விரைந்து, ௨ கி.கி., தங்க, வைர நகைகளை மீட்டனர்; மீதமுள்ள நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போலீசார் கூறுகையில், 'ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டதாக, தம்பதியர் கூறினர். வழக்கில், மேலும் இருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X