அரசு பஸ் சிறைபிடிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் சிறைபிடிப்பு

Added : பிப் 22, 2019
Advertisement

செரப்பணஞ்சேரி: செரப்பணஞ்சேரி பஸ் நிறுத்தத்தில், நின்று செல்லாத அரசு பஸ்சை பொதுமக்கள் நேற்று சிறைபிடித்தனர்.வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே செரப்பணஞ்சேரி கிராமம் உள்ளது. இந்த சாலை வழியாக, தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசு பஸ், தடம் எண்: 79, செரப்பணஞ்சேரி நிறுத்தத்தில் நிற்பதில்லை.இதனால், பள்ளி, வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் புகார் அளித்தனர்.அதிகாரிகள் உத்தரவிட்டும், பஸ்கள் நிற்பதில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள், செரப்பணஞ்சேரி பஸ் நிறுத்தம் பகுதியில், சாலையின் குறுக்கே நின்று அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X