பஸ் - ஸ்கூட்டர் மோதல் : கல்லூரி மாணவர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் - ஸ்கூட்டர் மோதல் : கல்லூரி மாணவர்கள் பலி

Added : பிப் 22, 2019
Advertisement

மாமல்லபுரம்; மாமல்லபுரம் அருகே, அரசு பஸ் - ஸ்கூட்டர் மோதியதில், பொறியியல் மாணவர்கள் இருவர் இறந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் மகன் அமீர் அகமது, 22; மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் மீர்சாலி, 22.சென்னை அருகாமை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதி, தனியார் கல்லுாரி, பொறியியல் மாணவர்கள்.புதுச்சேரியிலிருந்து கல்லுாரிக்கு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், நேற்று சென்று கொண்டிருந்தனர்.பூஞ்சேரி இருளர் காலனி அருகே, மாலை, 3:30 மணிக்கு, புதுச்சேரி சென்ற, அரசு பஸ்சில், இவர்கள் சென்ற வாகனம் மோதி, விபத்தில் சிக்கினர். இதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்தனர். மாமல்லபுரம் போலீசார், உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X