லஞ்ச வழக்கில் நகராட்சி அதிகாரிக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் நகராட்சி அதிகாரிக்கு சிறை

Added : பிப் 22, 2019
Advertisement

செங்கல்பட்டு: வீட்டு வரியை குறைத்து குறிப்பிட, லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரிக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர், 2006ல், நகராட்சி வருவாய் உதவி அதிகாரி, செல்வம் என்பவரிடம், வீட்டு வரி அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு செல்வம், 'வரியை குறைத்து குறிப்பிடுவதாக இருந்தால், 1,000 ரூபாய் தரவேண்டும்' என்றார்.லஞ்சம் தர விரும்பாத, ராஜலட்சுமி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில், புகார் செய்தார்.அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 750 ரூபாய் மதிப்பு நோட்டுகளை, ராஜலட்சுமி கொடுத்தார். அதை வாங்கிய செல்வத்தை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி கீதாராணி முன்னிலையில் நடந்தது; விசாரணை நேற்று முடிந்தது.இதையடுத்து, 8,000 ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி, கீதாராணி உத்தரவிட்டார். அரசு தரப்பில், வக்கீல் கவிதா ஆஜரானார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னை ஒழுங்கு முறை நீதிமன்றத்தில், செல்வத்திற்கு எதிராக, 2014ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X