பாக்., பயங்கரவாதிகளை திஹார் சிறைக்கு மாற்ற மனு

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (10)
Advertisement
பாக்., பயங்கரவாதிகளை, திஹார்,சிறைக்கு, மாற்ற, மனு

புதுடில்லி: ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏழு பேரை, டில்லியில் உள்ள திஹார் சிறைக்கு மாற்றக்கோரி, ஜம்மு - காஷ்மீர் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் அரசு தாக்கல் செய்துள்ள மனு:ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாக்., பயங்கரவாதிகள், சிறையில் உள்ள உள்ளூர் இளைஞர்களை மூளைச் சலவை செய்கின்றனர். அவர்கள் மனதை மாற்றி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
உள்ளூர்வாசிகளின் உதவியும், ஆதரவும் கிடைப்பதால், ஜம்மு - காஷ்மீருக்குள் தாக்குதல்கள் நடத்துவது, பயங்கரவாதிகளுக்கு சுலபமாகிறது. இதனால், ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, பாக்., பயங்கரவாதிகள் ஏழு பேரை, டில்லியில் உள்ள திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும்.






திஹார் சிறை இல்லையெனில், உயர் பாதுகாப்பு வசதிகள் உடைய, பஞ்சாப் அல்லது ஹரியானா சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.மேலும், பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து, அவர்கள் மீதான வழக்குகளை, ஜம்மு நீதிமன்றத்தில் இருந்து, டில்லி நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எல்.என்.ராவ் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனு தொடர்பாக, மத்திய மற்றும் டில்லி அரசு பதில் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-201920:07:03 IST Report Abuse
ஆப்பு சி.பி.ஐ அதிகாரிங்களை அந்தமான் நிகோபாருக்கு மாத்துறாங்களே....இந்த கைதிகளையும் அங்கே மாத்தலாமே? அவங்களுக்கும் சேஃப்டி.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-பிப்-201910:25:52 IST Report Abuse
ஆரூர் ரங் இது ஒரு சிறுபான்மை விரோத வெறிச்செயல்.
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
23-பிப்-201914:18:35 IST Report Abuse
 Muruga Velஅப்போ ஐதராபாத் ஜெயிலுக்கு மாத்திடலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
23-பிப்-201908:49:16 IST Report Abuse
Subramanian Arunachalam இதில் மத்திய மாநில அரசுகள் சொல்ல என்ன இருக்கிறது . எப்படியும் தீர்ப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகத்தான் இருக்க போகிறது . எனவே கைதிகளின் அபிப்பிராயம் அறிந்து அவர்களை திருப்தி படுத்தும் வகையில் தீர்ப்பு சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X