பா.ஜ., கேட்கும் ஏழு தொகுதிகள்மாநில நிர்வாகிகளுக்கு வாய்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கேட்கும் ஏழு தொகுதிகள்மாநில நிர்வாகிகளுக்கு வாய்ப்பு

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு வடசென்னை அல்லது தென்சென்னை, கோவை, சிவகங்கை, துாத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிந்துள்ளது.தமிழக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளது. 'கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு' என பா.ஜ., நிர்வாகிகள் கருதுகின்றனர். இதில் மாநில நிர்வாகிகள், மேலிட பொறுப்பாளர்கள் கோட்டை விட்டதாக கட்சியினர் மேலிடத்திற்கு தகவல் அனுப்பினர்.இதை உணர்ந்து மதுரையில் நேற்று நடந்த லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தலைவர் அமித்ஷா, ''கூட்டணியில் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கருதாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்,'' என பேசினார்.ஐந்து தொகுதிகள் என்பதால் மாநில நிர்வாகிகளை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் வகையில் கணிசமான ஓட்டு உள்ள தொகுதிகளை பெற பா.ஜ., நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.வடசென்னை அல்லது தென்சென்னை, கோவை, சிவகங்கை, துாத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.எவ்வளவு ஓட்டுக்கள்கன்னியாகுமரியில் 2014 தேர்தலில் பா.ஜ., 37.62 சதவீத ஓட்டுக்களையும், 2009 தேர்தலில் 33.24 சதவீதம், 2004ல் 2.45 லட்சம் ஓட்டுக்களையும் பெற்றது.கோவையில் 2014ல் 33.12 சதவீதம், 2009ல் 3.26 சதவீத ஓட்டுக்களையும் பெற்றுள்ளது.சிவகங்கையில் 2014ல் 13.2 சதவீதம், 2004ல் அ.தி.மு.க., கூட்டணியுடன் 34 சதவீதம், 1999ல் தி.மு.க., கூட்டணியில் 36 சதவீத ஓட்டுக்களையும் பெற்றுள்ளது.தென் சென்னையில் 2014 ல் 23.79 சதவீதம், 2009ல் 5.96 சதவீதம், 2004ல் 36.77 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.வடசென்னையில் 2014ல் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., 9:55 சதவீதம், 2009 ல் பா.ஜ., தனித்து நின்று 3.54 சதவீதம், 2004ல் அ.தி.மு.க., கூட்டணியுடன் 34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றுள்ளது.துாத்துக்குடியில் 2014ல் பா.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., வேட்பாளர் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 191 ஓட்டுக்கள் பெற்றார். 2009 தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ., 27 ஆயிரத்து 613 ஓட்டு பெற்றது.போட்டியிடும் தலைவர்கள்வடசென்னை அல்லது தென்சென்னையில் மாநில தலைவர் தமிழிசை அல்லது முன்னாள் தலைவர் இல.கணேசன், கோவையில் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், சிவகங்கையில் தேசிய செயலர் எச்.ராஜா, கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம். துாத்துக்குடியில் தி.மு.க., எம்.பி., கனிமொழி போட்டியிட்டால் அவரை எதிர்த்து மாநில தலைவர் தமிழிசை போட்டியிடலாம்.வடசென்னை அல்லது தென்சென்னையை ஒதுக்குவதாக அ.தி.மு.க., தரப்பு கூறுகிறது. பா.ஜ., தரப்பில் அதற்கு பதில் மதுரை கேட்கப்படுகிறது. மதுரை ஒதுக்கப்பட்டால் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அல்லது மகளிரணி மாநில தலைவர் மகாலட்சுமி போட்டியிட வாய்ப்பு உள்ளது.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201915:50:46 IST Report Abuse
Bhaskaran தூத்துக்குடியில் மதிமுக வாக்கு எப்படி காவிக்கட்சி வாக்காகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X