ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது

Added : பிப் 23, 2019
Advertisement

ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.பிப்.,21ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து 110 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் பாம்பனை சேர்ந்த கொலம்பஸ் என்பவரது படகை பிடித்தனர். படகில் இருந்த கொலம்பஸ் 38, அருள் சகாயம் 32, அடைக்கலம் 55, ஜெயசீலன் 35, முருகன் 40, ஆகிய 5 பேரையும் கைது செய்து தலைமன்னார் முகாமிற்கு கொண்டு சென்றனர்.பின் மீனவர்கள் மீது எல்லை தாண்டி தடை செய்த வலையில் மீன்பிடித்ததாக மன்னார் மீன்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X