ரூ.16 லட்சம் மோசடி ஏ.டி.எம்., ஊழியர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.16 லட்சம் மோசடி ஏ.டி.எம்., ஊழியர் மீது வழக்கு

Added : பிப் 23, 2019
Advertisement

விருதுநகர், ரூ.16 லட்சம் மோசடி செய்த ஏ.டி.எம்., பணம் நிரப்பும் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணத்தை பெற்று ஏ.டி.ஏம்.,களில் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2018 அக்., 8 ல் ஆடிட்டர் சிவக்குமார் விருதுநகர் தலைமை தபால் நிலைய ஏ.டி.எம்.,மை தணிக்கை செய்தார். அதில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் குறைவாக இருந்தது. விருதுநகர் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., ல் நடந்த தணிக்கையில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் குறைவாக இருந்தது. ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பிய முத்துக்குமார், அய்யனார், சக்தி கண்ணன் மூவரிடமும் அதிகாரிகள் விசாரித்தனர்.இதில் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த சக்தி கண்ணன் 29, ரூ.17 லட்சத்து 32 ஆயிரம் கையாடல் செய்தது தெரிந்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் ரூ.௧ லட்சத்தை செலுத்தி விட்டார். 16 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X