கூட்டணியால் ஸ்டாலின் விரக்தி சொல்கிறார் எச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணியால் ஸ்டாலின் விரக்தி சொல்கிறார் எச்.ராஜா

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மதுரை, ''பா.ஜ., அ.தி.மு.க., பா.ம.க., வலுவான கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்,'' என மதுரையில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா சாடினார்.அவர் கூறியதாவது:பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்தது கூடுதல் பலத்தை தருவதாக உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பல தொகுதிகளில் தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வை தவிர பா.ம.க., த.மா.கா., போன்றவை பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதால் தி.மு.க., காங்., கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது.இதனால்தான் பா.ம.க., நிறுவனர் ராமதாஸை ஸ்டாலின் ஒருமையில் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ., போன்றவர்கள் தி.மு.க., தீய சக்தி என மக்கள் மனதில் ஆழமாக விதைத்துவிட்டு சென்றுள்ளனர். தங்களுக்கு எதிராக பலமான கூட்டணி அமைந்ததால் ஸ்டாலின் விரக்தியில் பேசுகிறார்.எங்களை பொறுத்தவரையில் பா.ஜ.,விற்கு ஐந்து தொகுதிகள் என்பதை மட்டும் பார்க்காமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய பிரசாரம் செய்வோம், என்றார்.பா.ஜ., நிர்வாகி சிவபிரபாகரன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201915:40:44 IST Report Abuse
RM Anti Indian !
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201906:13:44 IST Report Abuse
Bhaskaran நீர் மேடைக்கே போகவேண்டாம் ஐயா முதலில் வெளிநாடுபோய்விட்டுவாருங்கள் விழும் வாக்குக்கூட விழாமல் போகப்போகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X