அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூட்டணியில் தே.மு.தி.க.,:
பன்னீர்செல்வம் நம்பிக்கை

அவனியாபுரம்: மதுரை வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின், ''தே.மு.தி.க., வுடன் கூட்டணி பேச்சு நடக்கிறது. நீங்கள் விரும்பிய கூட்டணி விரைவில் அமையும்'' என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 கூட்டணி, தே.மு.தி.க., பன்னீர்செல்வம், நம்பிக்கை

மதுரையில் நடந்த பா.ஜ., தொகுதி பொறுப் பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். பின், ராமநாதபுரத்திற்கு ஹெலி காப்டரில் செல்ல விமான நிலையம் வந்தார்.


அந்நேரத் தில் விமான நிலைய விரிவாக்க பணி துவக்க விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர் செல்வம் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை

நடத்தினார்.பின், அமித்ஷா ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாலையில் மதுரை விமான நிலையத்திற்கு திரும் பினார்.அதுவரை விமான நிலையத்தில் காத்திருந்த பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் இணைந்து மீண்டும் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தினர்.

பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள் முரளிதரராவ், ரவி, மாநில தலைவர் தமிழிசை, முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர். பின் பா.ஜ., நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசித்த அமித் ஷா, பாலக்காடு செல்வதற்காக தனி விமானத்தில் கோவை சென்றார்.

சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் கூறுகையில்,' 'அமித்ஷாவுடன் சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணிக்காக தே.மு.தி.க.,வுடன் பேசிவருகிறோம். ஓரிரு நாளில் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும். தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க., தயாராக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி மகத்தான வெற்றி பெறும்,'' என்றார்.

சந்திப்பை தவிர்த்த வாசன்: அமித்ஷா ராமநாதபுரம்

Advertisement

சென்ற நிலையில், மதுரை விமான நிலையத் தில் பன்னீர்செல்வம் காத்திருந்தார். அப்போது சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று சென்னை செல்வதற்காக வந்தார் த.மா.கா., தலைவர் வாசன்.


அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., இடம் பெற பேச்சு நடந்து வரும் நிலையில் பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்த்து நேரடியாக பயணிகள் பகுதிக்கு சென்றார் வாசன். கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதும் பேசுவதை தவிர்த்தார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-பிப்-201916:03:01 IST Report Abuse

Malick Rajaது முதல்வர் வேடத்தில் நடிப்பதும் இவரின் தலைவிதி .. 2021. மாறலாம் .. i

Rate this:
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201915:46:09 IST Report Abuse

RMJayaMadam illitreated Vijayakanth.His party never can be with AIADMK.Madurai karar.Thamanam romba!Premlatha also strong.Vijayakanth family basically Congress supporting family in Madurai .

Rate this:
Ganesh G - Hyderabad,இந்தியா
23-பிப்-201911:15:49 IST Report Abuse

Ganesh Gதே.மு.தி.க. கட்சி தனித்து விடப்பட வேண்டும். த.மா.கா. போன்று தே.மு.தி.க. விற்கும் நிலை ஏற்படும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X