ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து காங்., தலைவர் ராகுல் உறுதி| Dinamalar

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து காங்., தலைவர் ராகுல் உறுதி

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

திருப்பதி, ''மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை, உலகில் உள்ள எந்த நீதிமன்றத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறினார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதியில், நேற்று மாலை, காங்கிரஸ் பொதுகூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன், இதே இடத்தில் நின்றபடி, நரேந்திர மோடி, ஆந்திர மக்களுக்கு பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய், 'டெபாசிட்' செய்வது ஆகியவையும் அடங்கும். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.மத்தியில் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை முதல் பணியாக மேற்கொள்ளும். உலகில் உள்ள எந்த நீதிமன்றம் எதிர்த்தாலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவோம்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது. ஆனால், மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல், தன் உடையலங்காரம் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காக, மக்கள் வரிப்பணத்தை செலவு செய்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.கண் அடித்த ராகுல்: திருப்பதியில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், மேடைக்கு வந்ததும், அங்கு குழுமிருந்த பொது மக்களை, பார்த்து, புன்னகை செய்து கண் அடித்தார். இதற்கு முன், லோக்சபாவிலும், அவர் கண் அடித்தது, பெரும் விவாதப் பொருளானது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Kuppusamy - puducherry,இந்தியா
23-பிப்-201909:12:07 IST Report Abuse
Natarajan Kuppusamy எத்தனை பொய் சொல்லியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது ராகுல் மட்டுமல்ல தமிழ் நாடு அல்வா சாமீ ஸ்டாலினும்தான்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
23-பிப்-201906:05:26 IST Report Abuse
 Muruga Vel உலகில் உள்ள எந்த நீதிமன்றம் எதிர்த்தாலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவோம் …. புன்னகை செய்து கண் அடித்தார் … மனுஷனுக்கு புத்தி பேதலித்து விட்டதா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X