பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நீதிராஜன், 50, மாரியம்மாள் 50, கிருஷ்ணம்மாள் 50, கஸ்துாரி 45, ஆகிய 4 பேர் பலியாகினர்.திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனுார் கிராமத்தில், 2 ஏக்கர் நிலப்பரப்பில் 40க்கும் மேற்பட்ட அறைகளுடன் குணா பட்டாசு ஆலை உள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த அய்யாச்சாமி 48, நடத்திவந்தார். 'டபுள் ஷாட்' எனப்படும் பட்டாசுகள் தயாரித்தனர்.ஆலையில் பொட்டாசியம் நைட்ரேட் வைத்திருந்த அறையில் நேற்று பகல் 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பக்கத்து அறைகளுக்கும் தீ பரவியதால் அறைகள் வெடித்தன. புகை சூழ்ந்துகொண்டதால் தொழிலாளர்கள் அங்குமிங்கும் ஓடினர்.வெடிவிபத்தில் சிக்கி விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த நீதிராஜன், வரகனுார் அன்னராஜ் மனைவி கிருஷ்ணம்மாள், ஏழாயிரம்பண்ணை ஜெயகண்ணன் மனைவி கஸ்துாரி சம்பவஇடத்திலேயே உடல்கருகி பலியாகினர். வெம்பக்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.சாத்துார், கழுகுமலை, கோவில்பட்டி, புளியங்குடி, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். மாலை 4:30 மணிவரையிலும் தீயை அணைக்கும் பணி நடந்தது.மாவட்ட எல்லைவிரகனுாரை சேர்ந்த மாரியம்மாள், குகன்பாறையை சேர்ந்த குருவம்மாள், சங்கரேஸ்வரி,கருப்பாயி, பனையப்பட்டியை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.விரகனுார் கிராமம் விருதுநகர் மாவட்டம் குகன்பாறையை அடுத்துள்ளது. இருப்பினும் சம்பவம் நடந்த இடம் நெல்லை மாவட்டம் திருவேங்கடம் போலீஸ் எல்லைக்குள் வருவதால் நெல்லை போலீசார் விசாரிக்கின்றனர்.நெல்லை கலெக்டர் ஷில்பா, எஸ்.பி.,அருண்சக்திகுமார், விருதுநகர் எஸ்.பி., ராஜராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X