முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை, தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, தொகுதி ஒதுக்குவது பற்றி பேசப்பட்டு வருகிறது.சென்னை, அறிவாலயத்தில், நேற்று மாலை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் பாலு, இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி, துணை செயலர்கள் சக்தி நடராஜ், தங்கவேல் ஆகியோருடன், தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சு நடத்தினர்.அப்போது, தங்கள் கட்சிக்கு, நாமக்கல், பொள்ளாச்சி என, இரு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தனர்.இதையடுத்து, இரவு, 7:30 மணிக்கு, முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொகிதீன் தலைமையில், அதன் நிர்வாகிகள், தி.மு.க., குழுவுடன் பேச்சு நடத்தினர்.அப்போது, ராமநாதபுரம், வேலுார், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய, நான்கு தொகுதிகளில், இரண்டு தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டனர்.ஆனால், ஒரு தொகுதியை ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டது.இதற்கான ஒப்பந்தத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காதர்மொகிதீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-பிப்-201910:12:28 IST Report Abuse
ஆரூர் ரங் பாகிஸ்தான் பிரிவினையைக் கேட்டுப்பெற்ற அந்தக் கட்சிக்கு சீட் கொடுத்தல் மதச்சார்பின்மையின் அடையாளம்? பிரிவினைவாதிகளுக்குக் கொண்டாட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201903:51:58 IST Report Abuse
Bhaskaran அது தேர்தல் தோறும் போடும் வழக்கமான தர்மம்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X