'மாஜி' எஸ்.பி.,க்கு 10 ஆண்டு சிறை | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' எஸ்.பி.,க்கு 10 ஆண்டு சிறை

Added : பிப் 23, 2019
Advertisement

குர்தாஸ்பூர், பஞ்சாபில் 'மாஜி' போலீஸ் அதிகாரிக்க, பாலியல் பலாத்கார வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.குர்தாஸ்பூர் மாவட்டத்தில், போலீஸ், எஸ்.பி.,யாக பணியாற்றியவர் சல்வீந்தர் சிங்.2016ல் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முன், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். சில மணி நேரங்களுக்கு பின், பயங்கரவாதிகள் விடுவித்தனர்.எஸ்.பி., சல்வீந்தர் சிங்குக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.இந்நிலையில், குர்தாஸ்பூரில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை, எஸ்.பி., சல்வீந்தர் சிங் விசாரித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு, விசாரணைக்காக அடிக்கடி சென்று வந்தார்.குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவியை, எஸ்.பி., சல்வீந்தர் சிங், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 'என் ஆசைக்கு சம்மதித்தால், இந்த வழக்கில் இருந்து உன் கணவனை விடுவிப்பேன்' என மிரட்டி, அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், கணவனை விடுவிக்க, அந்த பெண்ணிடம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. சல்வீந்தர் சிங் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.இது தொடர்பான விசாரணை, பஞ்சாப் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் எஸ்.பி., சல்வீந்தர் சிங்குக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், லஞ்சம் பெற்ற வழக்கில் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X