சம்பள பாக்கி கேட்டு சாலை மறியல் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பள பாக்கி கேட்டு சாலை மறியல் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கைது

Added : பிப் 23, 2019
Advertisement

பெண்ணாடம்: ஆறு மாத சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்ட, அம்பிகா சர்க்கரை ஆலை ஊழியர்கள் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, கடந்த 6 மாத சம்பளத்தை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலை நிர்வாகியுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆலை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் 12:00 மணியளவில், விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தத்தில், மறியலில் ஈடுபட்டனர்.சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் 47 பேரை கைது செய்தனர். இதனால், விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X