சாலை விபத்தில் வாலிபர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : பிப் 23, 2019
Advertisement

வேப்பூர்: வேப்பூர் அருகே, டிராக்டர் டிப்பர் மீது, மோட்டார் பைக் மோதியதில் வாலிபர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.வேப்பூர் அடுத்த நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 24; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் தனது டி.வி.எஸ்., பைக்கில் நண்பருடன் சித்துாரிலிருந்து நாரையூருக்கு சென்று கொண்டிருந்தார். கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த திருப்பயர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோதியது.இதில், முத்துக்குமார்,அவரது நண்பர் செல்லத்துரை, 22 படுகாயமடைந்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் முத்துக்குமார் இறந்தார். செல்லதுரை மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து வேப்பூர் சப் - இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X