தார் சாலை அமைக்கும் பணி மக்கள் தடுத்ததால் நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தார் சாலை அமைக்கும் பணி மக்கள் தடுத்ததால் நிறுத்தம்

Added : பிப் 23, 2019
Advertisement

புவனகிரி: புவனகிரியில், இரு இடங்களில் போடப்பட்ட தார் சாலை பணியை, தரமாகபோட வலியுறுத்தி பொதுமக்கள் தடுத்ததால், சாலைபோடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட பெரிய தேவாங்கர் தெருவில் இருந்து கவரப்பாளைய தெரு வரை, நபார்டு நிதி உதவிதிட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை மற்றும் ஆனந்தம் நகரில் இருந்து சவுடாம்பிகை நகர் வரை நகர்புறசாலைகள் மேம்பாடு திட்டத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலை அமைக்கும் பணி, நேற்று முன்தினம் நடந்தது.தார் சாலை பணியை, பேவர் இயந்திரம் மூலம் தரமாக போடாததால், அப்பகுதியினர் சாலை அமைக்கும் பணியைதடுத்து நிறுத்தினர்.தகவலறிந்த, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜா, சம்பவ இடத்திற்கு வந்து சாலை போடும் பணியை, தரமாகபோடுவதாக உறுதியளித்தால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் தார் சாலை அமைக்கும் பணி, இரு இடங்களிலும் நேற்று நடைபெறவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X