நெல்லிக்குப்பத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : பிப் 23, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில், நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பிப்ரவரி 21ம் தேதிக்குள், அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் 22ம் தேதி அரசு அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்படும் என நோட்டீஸ் வழங்கபட்டது.பல வர்த்தகர்ககள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். வழக்கம் போல் நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்குவதோடு என பலர் அலட்சியமாக இருந்தனர்.ஆனால், நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கந்தசாமி, தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது.சப் இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ஏழுமலை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பல இடங்களில் ஆக்கிரமித்திருந்த சிறிய கட்டடங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.ஒரு சில இடங்களில் பாரபட்சம் இருந்தாலும் மற்ற இடங்களில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பாதிக்கப்பட்ட சில வர்த்தகர்கள் சாலையை ஒட்டியுள்ள அரசியல் கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டுமென தகராறு செய்தனர். அரசியல் கட்சி நிர்வாகிகளை அழைத்து, கொடி கம்பங்களை எடுக்க சொல்வோம். எடுக்காவிட்டால் நாங்கள் எடுத்து விடுவோம் என அதிகாரிகள் கூறினர்.அதேபோல் ஆலைரோட்டில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு சாலை பிரம்மாண்டமாக உள்ளது.கடலூர் மடப்பட்டு புறவழி சாலை அமைக்க, விவசாய நிலங்களை பாழாக்குவதை விட இந்த சாலையையே அகலபடுத்தலாம் என விவசாயிகள் கூறினர்.இனி ஆக்கிரமிப்பு நடந்தால், என் கவனத்துக்கு கொண்டு வந்தால், வழக்கு போடுவேன் என சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை கூறினார்.ஆக்கிரமிப்புகள் நடந்தால் சாலை பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X