தாறுமாறாக ஓடிய ஆட்டோ கடலுாரில் பரபரப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாறுமாறாக ஓடிய ஆட்டோ கடலுாரில் பரபரப்பு

Added : பிப் 23, 2019
Advertisement

கடலுார்: கடலுாரில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ, பெண் மீது மோதி, சாலையோர கடையில் இடித்து நின்றது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில், நேற்று இரவு 8:00 மணியளவில், தாறுமாறாக சென்ற ஆட்டோ ஒன்று, சாலையில் நடந்து சென்ற பெண் மீது மோதியது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து சென்ற ஆட்டோ, கடலுார் கோர்ட் வளாகத்தின் எதிரே இருந்த சாலை ஓர கடையில் மோதி நின்றது.ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர் புதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செம்மண்டலத்தை சேர்ந்த பாபு மகன் மாதவன்,33: எனத் தெரியவந்தது. இதில் காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X